Advertisment

இது இன்னொரு தோல்வி - க்ளைமேக்ஸிலும் ரசிகர்களை ஏமாற்றிய தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் 18 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 3 சமன், 12 தோல்விகளுடன் 30 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil thalaivas vs up yoddha pro kabaddi live streaming - வெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா? - யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்

tamil thalaivas vs up yoddha pro kabaddi live streaming - வெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா? - யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்

7வது புரோ கபடி சீசனில், வெற்றியுடன் தொடங்கிய தமிழ் தலைவாஸ், அடுத்து 2 தோல்வி, தொடர்ந்து ஒரு வெற்றி, ஒரு சமன், ஒரு வெற்றி என நம்பிக்கை அளிக்கும் விதமாகவே ஆடிக் கொண்டிருந்தது. ஆனால், அதன் பிறகு தொடர்ந்து வரிசையாக ஒன்பது தோல்விகளை சந்தித்தது.

Advertisment

சமீபத்தில் நடந்த புனேரி பால்டன் அணிக்கெதிரான ஆட்டம் 36-36 என்ற புள்ளிக் கணக்கில் சமனில் முடிந்தது. படாத பாடுபட்டு பல போராட்டங்களுக்குப் பிறகு தோல்வியில் இருந்து தப்பித்து இப்போட்டியில் டிரா செய்தது தமிழ் தலைவாஸ்.  அதுவும், கடைசி நிமிடத்தில் எதிரணியை ஆல்-அவுட் செய்து அதன் மூலம் 3 புள்ளிகளை பெற்றதால் தோல்வியில் இருந்து தப்பியது.

தமிழ் தலைவாஸ் vs யு.பி.யோத்தா

இந்நிலையில் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் தமிழ் தலைவாஸ் அணி யு.பி.யோத்தா அணியை எதிர்கொண்டது. இன்றிரவு 8.30 மணிக்கு இப்போட்டி தொடங்கியது. ஆனால், 42-22 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் மோசமான தோல்வியைத் தழுவியது.

இதுவரை தமிழ் தலைவாஸ் 18 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 3 சமன், 12 தோல்விகளுடன் 30 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

Tamil Thalaivas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment