Advertisment

ப்ரோ கபடி லீக் : உ.பி.யோத்தாஸ் அணியை வீழத்தி தமிழ் தலைவாஸ் ஆறுதல் வெற்றி

புரோ கபடியில் டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதுகின்றன .

author-image
WebDesk
New Update
 Tamil Thalaivas vs UP Yoddhas  PKL Season 10 match updates in tamil

புரோ கபடி லீக் 2023 -24: தமிழ் தலைவாஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் இன்று மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pro Kabaddi League | Tamil Thalaivas: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.

Advertisment

இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஒரே ஒரு போட்டி மட்டுமே நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 32-25 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. 

ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட தமிழ் தலைவாஸ் அணிக்கு இந்த ஆட்டத்தின் வெற்றி ஆறுதல் வெற்றியாக அமைந்தது. 19 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 8 வெற்றி யுடன் 45 புள்ளிகள் பெற்று 8வது இடத்தில் உள்ளது. 

தமிழ் தலைவாஸ் vs உ.பி.யோத்தாஸ்

நடப்பு புரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 18 போட்டிகளில் 7ல் வெற்றி, 11ல் தோல்வி என 40 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. மறுபுறம், உ.பி. யோதாஸ் 17 போட்டிகளில் 4ல் வெற்றி, 12ல் தோல்வி, ஒரு போட்டி டிரா என 28 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது.

பிப்ரவரி 4 அன்று குஜராத் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 30-42 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் தோல்வியடைந்தனர். அதே வேளையில், உ.பி. யோதாஸ் பிப்ரவரி 3 அன்று யு மும்பாவை 39-23 என தோற்கடித்து தனது கடைசி ஆட்டத்தில் வென்றது.

நேருக்கு நேர் 

தமிழ் தலைவாஸ் 6 முறை வெற்றி பெற்று முதலிடத்திலும், உ.பி. யோதாஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் டையில் முடிந்தது. முன்னதாக இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் மற்றும் உ.பி. யோதாஸ் மோதிய போட்டியில் தமிழ் தலைவாஸ் 46-27 என்ற புள்ளிகள் கணக்கில்  உ.பி. யோதாசை வீழ்த்தியது. 

ஏற்கனவே பிளே-ஆஃப் வாய்ப்பை தவறவிட்டுள்ள இவ்விரு அணிகளும் இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றிக்காக போராடுவார்கள். எனவே, தமிழ் தலைவாஸ் மற்றும் உ.பி. யோதாஸ் அணிகள் மோதும் இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Tamil Thalaivas Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment