/indian-express-tamil/media/media_files/2025/06/10/3RfpMOdNNvnLT3PXFkrb.jpg)
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக கபடி இருந்து வரும் சூழலில், இம்மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி ஒருமுறை கூட இறுதிப் போட்டிக்குள் நுழையாது இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
புரோ கபடி லீக் (பி.கே.எல்) தொடரில் களமாடி வரும் அணி தமிழ் தலைவாஸ். சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்த அணி, இத்தொடருக்கான 5-வது சீசன் (2017 ஆம் ஆண்டு) முதல் விளையாடி வருகிறது. இருப்பினும், அந்த அணியால் ஒருமுறை கூட கோப்பை கனவை நெருங்க முடியவில்லை. இதுவரை 7 சீசன்களில் ஆடியிருக்கும் தமிழ் தலைவாஸ், அதன் முதல் மூன்று சீசன்களில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.
இந்தத் தொடரில் சில தரமான ஆட்டங்களை ஆடியிருந்தாலும், அந்த அணியால் எல்லைக் கோட்டை கடக்க முடியவில்லை. அவர்கள் ஒரே ஒருமுறை மட்டும் தான் பிளே ஆஃப்க்கு முன்னேறி இருக்கிறார்கள். அது 2022 ஆம் ஆண்டில் தான். அந்த சீசனை (பி.கே.எல் 9) சிறப்பாக தொடங்கிய அணியை வீரர்களின் காயம் புரட்டிப் போட்டது. குறிப்பாக, டாப் வீரரான பவன் செஹ்ராவத் தொடக்க ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்திலே காயம் காரணமாக வெளியேறி, தொடரில் இருந்து முற்றிலுமாக வெளியேறினார்.
மேலும், தொடரின் நடுவில் மேலும் சில முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால், அரைஇறுதி வாய்ப்பு நழுவிப் போனது. ஆனாலும், கடைசி நிமிடம் வரை தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல்முறையாக பிளே ஆப்க்குள் நுழைந்து வரலாறு படைத்தனர்.
எனினும், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக கபடி இருந்து வரும் சூழலில், இம்மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி ஒருமுறை கூட இறுதிப் போட்டிக்குள் நுழையாது இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த அணியில் ராகுல், அஜய் தாக்கூர், மஞ்சீத் சில்லர், மோஹித் சில்லர் மற்றும் ரன் சிங் போன்ற நட்சத்திர வீரர்களும், நரேந்தர், சாகர் போன்ற இளம் அதிரடி வீரர்களும் இருந்தும் சோபிக்காமல் போனது வேதனையே. இந்த பின்னடைவில் இருந்து இந்த சீசன் முதல் தமிழ் தலைவாஸ் அணி மீள வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆவலாக உள்ளது.
பி.கே.எல் 2025 தொடருக்கான தமிழ் தலைவாஸ் அணி
மொயின் ஷஃபாகி - எலைட் தக்கவைக்கப்பட்ட வீரர்
ஹிமான்ஷு - எலைட் தக்கவைக்கப்பட்ட வீரர்
சாகர் - எலைட் தக்கவைக்கப்பட்ட வீரர்
நிதேஷ் குமார் - தக்கவைக்கப்பட்ட இளம் வீரர்
நரேந்தர் - தக்கவைக்கப்பட்ட இளம் வீரர்
ரோனக் - தக்கவைக்கப்பட்ட இளம் வீரர்
விஷால் சாஹல் - தக்கவைக்கப்பட்ட இளம் வீரர்
ஆஷிஷ் - தக்கவைக்கப்பட்ட இளம் வீரர்
அனுஜ் கலுராம் கவாடே - ஏற்கனவே உள்ள புதிய இளம் வீரர்
திராஜ் ரவீந்திர பைல்மரே - ஏற்கனவே உள்ள புதிய இளம் வீரர்
பவன் செஹ்ராவத் - பிரிவு ஏ
அர்ஜுன் தேஷ்வால் - பிரிவு ஏ
அலிரேசா கலிலி - பிரிவு சி
மோஹித் - பிரிவு சி
சுரேஷ் ஜாதவ் - பிரிவு டி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.