6-வது சர்வதேச அளவிலான கராத்தே அழைப்பு போட்டி ஹயாசிக - ஹா கராத்தே மற்றும் ஃபைட்டர்ஸ் அகாடமி சார்பில் கோவையில் உள்ள எஸ்.வி.எம் மஹாலில் நடைபெற்றது. மலேசியா - சிங்கப்பூர் - தாய்லாந்து - ஸ்ரீலங்கா போன்ற சர்வதேச நாடுகளில் இருந்தும் இந்தியாவில் 15"மாநிலங்களை சேர்ந்த சுமார் 2000"க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு பெற்ற ஹயாசிக - ஹா கராத்தே போட்டியை, தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தவேலுமணி தொடங்கி வைத்தார்.
பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டிகளில் தீத்திபாளையத்தில் உள்ள சி.எம்.சி சர்வதேச பள்ளியை சேர்ந்த பிரேம்ஜித், மகதி, லக்க்ஷனா, ஸ்ம்ருதி, ஆதிரா, அணிக்க்ஷா ஆகிய மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை பெற்றனர். பள்ளியின் தாளாளர் லீமா ரோஸ் மற்றும் பள்ளியின் முதல்வர் பிரேமலதா நாயர் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக மலேசியா நாட்டின் தியாகு பொன்னையா கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தினார். அணிக்கான சுழல் கோப்பை இதனை ஃபைட்டர்க்ஷ அகாடமி சேர்மோன் செல்வதுரை வழங்கினார். இப்போட்டிகள் ஹயாசிக - ஹா வின் இந்திய பரிசுகளை நல்லறம் அறக்கட்டளை அன்பரசன் மற்றும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் மற்றும் இந்துஸ்தான் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் கருணாநிதி ஆகியோர் வழங்கி வாழ்த்தினார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“