தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் 7-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தோனிக்கு விளையாடி வாய்ப்பு இருந்தாலும் சுரேஷ் ரெய்னாவுக்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
இந்தியவில் நடைபெற்று வரும் இந்திய பிரீமியர் லீக் தொடர் உலகவில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரின் 16-வது சீசன் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்திய ஏ அணியில் விளையாடிய பல வீரர்கள் இந்த தொடரில விளையாடி வரும் நிலையில், இந்திய அணியில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள ஆர்.அஸ்வின் விளையாடி வருவது இந்த தொடருக்கான சர்வதேச அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது. மேலும் இந்த தொடரில் கடந்த 2016-ம் ஆண்டு விளையாடிய நடராஜன் அதன்பிறகு இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார்.
அதன்பிறகு 2018-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் மற்ற மாநில வீரர்களின் கவனத்தை ஈர்த்தத நிலையில், அவர்களும் டிஎன்பிஎல் தொடரில் விளையாட ஆர்வமாக பதிவு செய்தனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த சுரேஷ் ரெய்னா டிஎன்பிஎல் தொடரில் விளையாட விரும்பினால் அனுமதிக்கப்படுமா என்ற ஒரு கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்தியாவின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுள்ள சுரேஷ் ரெய்னா தற்போது வெளிநாட்டு பிரீமியர் லீக் தொடரில் விளையாடி வருகிறார். இதனால் அவர் ஐபிஎல், உள்நாட்டு கிரிக்கெட் தொடர் மற்றும் மாநில கிரிக்கெட் தொடரில் பங்கேற்க அனுமதி வழங்க வாய்ப்பில்லை. பிசிசிஐ விதிப்படி ஒரு வீரர் வெளிநாட்டு டி20 மற்றும் டி10 லீக் போட்டிகளில் விளையாடி இருந்தால் அவர் இந்தியாவின் போட்டிகளில் பங்கேற்க முடியாது.
எனவே சுரேஷ் ரெய்னா விரும்பினாலும் டிஎன்பிஎல் தொடரில் விளையாட முடியாது. அதே சமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் மகேந்திரசிங் தோனி டிஎன்பிஎல் தொடரில் விளையாட தகுதியானவர். தோனி தமிழகத்தில் இருந்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கீழ் தன்னை ஒரு வீரராக பதிவு செய்தால் அவர் டிஎன்பிஎல் தொடரில் விளையாட வாய்ப்புள்ளது. ஆனால் தோனி டிஎன்பிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.
முன்பு கேரளாவுக்காக விளையாடி வந்த சந்தீப் வாரியர் தமிழ்நாடு அணிக்காக விளையாடி டிஎன்பிஎல் தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரும் ஜூலை 12-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த சீசனுக்கு முன்னதாக வீரர்கள் ஏலம் நடைபெற்றது. மேலும் இந்த சீசனில் இம்பேக்ட் ப்ளேயர் மற்றும் டிஆர்எஸ் விதிமுறை அமல்படுத்தப்பட்டு குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.