கோவையில் பெண் போலீஸ் கிரிக்கெட் போட்டி: இன்ஸ்பெக்டர் தெய்வமணி அணி வெற்றி

கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

author-image
WebDesk
New Update
Women Cricket

பெண் காவலர்கள் கிரிக்கெட் போட்டி

கோவையில் நடைபெற்ற மாநகர பெண் காவலர்களுக்கான கிரிக்கெட் போட்டியயில் வெற்றி பெற்ற அணிக்கு மாநகர காவல் ஆணையாளர் கோப்பையை வழங்கினார்.

Advertisment

பெண்கள் காவல்துறையில் காவலர்களாக சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கோவை மாநகர், தாலுக்கா காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படை ஆகியவற்றில் பணியாற்றி வரும் பெண் காவலர்களுக்கு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. கோவை மாநகர ஆயுதப்படை  மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்  துவக்கி வைத்தார்.

இதில் பெண் காவல் ஆய்வாளர் பிரபாதேவி தலைமையிலான எல்லோ வாரியர்ஸ் (Yellow Warriors) என்ற அணியும், பெண் காவல் ஆய்வாளர் தெய்வமணி தலைமையிலான ப்ளூ ஃபைட்டர்ஸ் (Blue Fighters) என்ற அணியும் மோதின. முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய எல்லோ வாரியர்ஸ் (Yellow Warriors)  அணி நிர்ணியிக்கப்பட்ட 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் சேர்த்தது.

publive-image
Advertisment
Advertisements

பின்னர் 50 ரன்க்ள வெற்றி இலக்குடன் ஆடிய ப்ளூ ஃபைட்டர்ஸ் (Blue Fighters) அணி 3.3 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ப்ளூ ஃபைட்டர்ஸ் (Blue Fighters) அணியை சார்ந்த தேவி 10 பந்துகளில் 3 சிக்ஸர் 3 ஃபோர்கள் உட்பட 33 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற ப்ளூ ஃபைட்டர்ஸ் (Blue Fighters) அணி பவுளிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய எல்லோ வாரியர்ஸ் (Yellow Warriors) அணி நிர்ணியிக்கப்பட்ட 8 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் சேர்த்தது. இதில் பொன்னுபேபி 29 பந்துகளில் 10 சிக்ஸர் 2 ஃபோர்கள் உட்பட 72 ரன்கள் அடித்தார்.  பின்னர் ஆடிய ப்ளூ ஃபைட்டர்ஸ் (Blue Fighters) அணி 6.2 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் தேவி 22 பந்துகளில் 8 சிக்ஸர் 4 ஃபோர்கள் உட்பட 70 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தார்.

publive-image

இப்போட்டியில் 2-0 என்ற கணக்கில் பெண் காவல் ஆய்வாளர் தெய்வமணி தலைமையிலான ப்ளூ ஃபைட்டர்ஸ் (Blue Fighters) அணி அபார வெற்றி பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோவை மாநகர காவல் ஆணையர்  பாலகிருஷ்ணன்,  வெற்றி கோப்பையை வழக்கினார். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பெண் காவலர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர வடக்கு சரக காவல் துணை ஆணையர் சந்தீஷ், தலைமையிட காவல் துணை ஆணையர்  சுஹாசினி, ஆயுதப்படை காவல் உதவி சேகர், உட்பட இருபால் காவல் ஆளிநர்களும் கலந்துகொண்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: