Advertisment

தோல்வி முகம் தெரியா காந்த கண்ணழகி… முன்னணி வீராங்கனையாக திகைப்பூட்டும் தானியா!

Tania had been her team's leading light as well as the firefighter Tamil News: போட்டி தொடங்கியதும் தானியாவின் கண்கள் தெளிவாகப் பேசத் தொடங்கின. அதை உற்று கவனித்தால், அவரின் விளையாட்டின் நிலையை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tania Sachdev leading light and firefighter of India A team

Tania Sachdev at Chess Olympiad 2022. (Photo: chess.com/Twitter)

Chess Olympiad 2022 -  Tania Sachdev  Tamil News: வழக்கமாக, தானியா சச்தேவ், ஒரு நகர்வை முடித்ததும், தனது நாற்காலியில் இருந்து எழுந்து, சுருண்டு கிடக்கும் தனது சுருட்டை முடியை வாரி முடிந்து, அங்கிருக்கும் நடைபாதையில் சோர்வாக உலாவார். அதோடு, அடிக்கடி தனது அணியினருக்கு அருகில் நின்று அவர்களின் செஸ் பலகையைப் பார்த்துக் கொண்டிருப்பார். அப்போது அவரது முகம் உணர்ச்சியற்றது போல் இருக்கும். ஆனால், விளையாட்டு அரங்கிற்கு வெளியே, அவர் அதற்கு அப்படியே எதிராக இருப்பார். தனது அணியினருடன் ஜாலியாக அரட்டை அடிப்பார். அவர்களுடன் கலகலப்பாக பேசுவார். ஆனால், ஆட்டம் நடக்கும் வளையத்தின் அமைதியான சூழ்நிலையில் அவர் நுழைந்ததும், அவரது கண்களில் தவிர, மற்ற எதிலும் தனது உணர்ச்சியை வெளிப்படுத்த மாட்டார்.

Advertisment

போட்டி தொடங்கியதும் அவரது கண்கள் தெளிவாகப் பேசத் தொடங்கின. அதை உற்று கவனித்தால், அவரின் விளையாட்டின் நிலையை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ளலாம். அவர் கிட்டத்தட்ட வர்ணனையாளர்களைப் போல் இயங்குவார். மகிழ்ச்சியில் இருந்து ஆத்திரம், மற்றும் சந்தேகம் வரை என உணர்ச்சிகளின் கலவையானது முன்னும் பின்னுமாக அவரது முகத்தில் மிளிர்கிறது. ஜார்ஜியாவின் சலோமி மெலியாவுக்கு எதிரான போட்டி தொடங்கியபோது, ​​அவரது கண்கள் அமைதியாக இருந்தன. ஆரம்பகால சூழ்ச்சிகள் அனைத்தும் செஸ் புத்தகத்தில் இருப்பது போல் இருந்தது. ரூய் லோபஸ் தொடக்கம், 16 ஆம் நூற்றாண்டின் ஸ்பானிஷ் பாதிரியார் (அவர் பிஷப் ஆகவில்லை!) பெயரிடப்பட்ட விளையாட்டின் மிகவும் கிளாசிக்கல் திறப்புகளில் ஒன்றாகும். அதைத் தொடர்ந்து மோர்பி டிஃபென்ஸ், ரூய் லோபஸ் வரிசையில் பிளாக்கின் மிகவும் பிரபலமான ஆரம்ப நகர்வு.

தானியாவுக்கு முன் இருந்த பயமுறுத்தல் அவருக்கு தெளிவாகியது. இருவரும் சண்டையிட்டு மொத்தமாக இழப்பதற்கு முன், ஒருவருக்கொருவர் சில சிறிய இழப்புகளை கொடுக்க முன் வந்தனர். சீராக, அடிக்கடி நகர்வுகளுக்கு நகர்வு ஒரு காயை எடுத்துக் கொண்டனர். மேலும், அவர்கள் தளத்தை ஒரு உறுதியான மேசன் போல பூசினர். மெதுவாக இடைவெளிகளை சரிசெய்தனர். விரிசல்களை சரிசெய்து, துருப்புக்களை சரியான வரிசையில் ஏற்பாடு செய்தனர். இது பதுங்கியிருந்து விளையாடும் விளையாட்டாக இருக்கப் போவதில்லை, மாறாக பதுங்கு குழியிலிருந்து நேராக துப்பாக்கிச் சூடு நடத்தும் விளையாட்டாக இருக்கப் போகிறது. அரசன் கட்டளைகளை கொடுப்பது தான் விஷயம். ஆர்டர்கள் விளையாட்டில் மிகவும் தாமதமாக வந்தன. 14 வது நகர்வில், கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கவனமாக நகர்த்திய பிறகு, கேம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான உத்தரவுகளை கொடுப்பதற்கு முன்பு ஒரு ராணுவ ஜெனரலின் கண்களைப் போல தானியாவின் கண்கள் உறுதியானவையாக தீப்பற்றிக்கொண்டது.

ஆனால் இருவருக்கும் அந்த "கடின உழைப்பு" என்று கூறுவார்களே அது அதிகமாக இருந்தது. வெற்றியைச் சுவைக்க விரும்பும் எவரும் அங்கு கவனமாக அடுக்கப்பட்டுள்ள சிப்பாய் காய்களை ஊடுருவி சென்று தகர்த்த வேண்டும். நீங்கள் ஒருவரை சுடலாம்; நீங்களும் சுடப்படலாம். அப்படித்தான் ஆட்டத்தின் போக்கும் இருந்தது. தானியா சலோமியின் ரூக் காயை தட்டித் தூக்கினார். சில கணங்களில், வாள்களின் வசைபாடுதல்கள் அங்குமிங்கும் பறந்தன. மாறி மாறி வெட்டிக்கொண்டன.

26 வது நகர்வில், தானியா பிஷப்கள் மற்றும் நைட் என இரண்டையும், மற்றொரு சிப்பாய் காய்கயையும் தட்டித் தூக்கினார். ஆனால், அவருடைய எதிரி அவருடை இரண்டு சிப்பாய்கள் ஒரு பிஷப் மற்றும் நைட்டை காலி செய்தார். போட்டியில் மீண்டும் அனல் பறக்க தொடங்கியது. போர்டில் குறைவான காய்களே இருந்தன (இருப்பினும் ஒரு இறுதி ஆட்டம் நெருங்கிவிட்டது என்று அர்த்தம் இல்லை). ஆனால் அவை கணிசமான நன்மையை ஏற்படுத்தவில்லை அல்லது மாறாக, அவர்கள் செய்த எந்த நகர்த்தல்களும் சமமாக இருந்தன. தானியாவுக்கு சலோமியின் மைதானத்திலும், சலோமிக்கு தானியாவின் மைதானத்திலும் கை ஓங்கி இருந்தது. ஒவ்வொன்றும் மற்றவரின் ஆட்டத்தை பிரதிபலிப்பது போல இருந்தது.

இருவருக்குமான போரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு தொடர்ந்தது. இருவரும் ராணிகளை இழந்தனர். மேலும் 35 வது நகர்வில், சிப்பாய்கள், ஒரு ரூக் மற்றும் ராஜா மட்டுமே எஞ்சியிருந்தனர். இருவரின் பார்வையிலும் ராஜா, ஒரு பரபரப்பான க்ளைமாக்ஸ். ஆனால், அந்த இடத்தில் மூன்று முடிவுகள் தோன்றின. ஒன்று தானியா வெற்றி, இரண்டு சலோமி வெற்றி. மூன்றாவது ஆட்டம் ட்ரா செய்யப்படுவது. ருய் லோபஸ் கோடுகளைப் போலவே, இது ஒரு டிராவை நோக்கி நகர்ந்தது.

இப்போது 6 ஆட்டங்களில் தோல்வியடையாத தானியா, இந்த ஆட்டத்தை ட்ரா செய்தால் (கருப்பு காய்களுடன்) அவருக்கு 0.5 புள்ளிகள் கிடைக்கும். ஏற்கனவே அவரது அணியில் கோனேரு ஹம்பி மற்றும் ஆர் வைஷாலியின் வெற்றிகள், மற்றும் ஹரிகா துரோணவல்லியின் டிரா அடைந்துள்ள நிலையில், இந்திய அணி அதன் முதலிடத்தைத் தக்கவைக்க உதவும். ஆனால், ஆட்டத்தை ட்ரா செய்ய விரும்பாத தானியவின் கண்கள் மிகவும் மகிழ்ச்சியற்ற அல்லது சோகமான தோற்றத்தைக் கொண்டிருந்தன.

publive-image

இந்தியா ஏ அணியின் பல வெற்றிக்கு தானியா மற்றும் அவரது அசைக்க முடியாத ஃபார்ம் முக்கிய காரணமாகும். அவர் தனது அணியின் முன்னணி வீராங்கனையாகவும், அணிக்காக தீபம் ஏந்தி செல்பவராகவும், பற்றி எரியும் தீயை அணைப்பவராகவும் திகழ்ந்திருக்கிறார். இது அவரது அணியை பள்ளத்தாக்கில் இருந்து கீழே உருண்டு சென்று விடாமல் தடுத்து நிறுத்தியது. அவருடைய பல்துறைத்திறன் குறைத்து மதிப்பிடப்பட்டு இருந்தது. அவரால் எதிரிகளைத் தாக்குவதோடு நசுக்கவும், கோட்டையைப் பிடிக்கவும் அல்லது விரைவான எதிர்த்தாக்குதலை நடத்தவும் முடியும். இந்த ஆட்டத்தின் மூலம் அந்த நற்பண்புகள் அனைத்தும் பிரகாசித்தன. மேலும் அவரது கண்கள் கலந்துகொள்ளும் அனைத்து உணர்ச்சிகளையும் கைப்பற்றின.

publive-image

அவரது ஒலிம்பியாட் பதிவு:- விளையாடியது: 6; வெற்றி 4, டிரா: 2, புள்ளிகள்: 5/6 - என முன்மாதிரியாகத் திகழ்கிறார். அவருடைய சில விளையாட்டுகளை மறுபரிசீலனை செய்வது அறிவுறுத்தலாக இருக்கிறது. ருஷ்கோனா சைடோவாவுக்கு எதிராக, அவர் ஒரு மராத்தான் போட்டியில் கறுப்புக் காய்களுடன் தோல்வியின் விளிம்பில் இருந்து ஒரு கணக்கீட்டு, ஆனால் பொறுமையான ஆட்டத்துடன் பின்வாங்கினார். நான்காவது சுற்றில் ஹங்கேரிக்கு எதிராக, அவர் ஒரு மேட்ச்-வின்னிங் பாயிண்டைப் பெற ஆழமாக தோண்டி வெற்றி வாகை சூடினார். அவருடைய புத்திசாலித்தனத்தைப் போலவே அவருடைய எதிர்ப்பும் பற்றி எரிகிறது.

publive-image

தானியாவின் பாரம்பரியத்தை மறுபரிசீலனை செய்ய சரியான நேரத்தை வழங்குகிறது. அவர் இந்திய சதுரங்கத்தில் அச்சு முறிப்பவராக இருந்தார். செஸ்ஸை ஒதுங்கிய, விலகிய மேதைகளின் ஒரே மாதிரியான விளையாட்டாக முறியடித்தவர்களில் முதன்மையானவர். அவர் மிகவும் வித்தியாசமானவர், வெளிப்படையானவர், நாகரீகமானவர். அவருடைய வர்ணனையில் கேட்போருக்கு சிக்கலான செஸ் மொழியை மறுகட்டமைக்கும் திறன் படைத்தவர். செஸ் விளையாட்டாளர்கள் சதுரங்க அரங்கிற்கு வெளியே உள்ள ஒரு வகைக்கு இணங்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் காட்டி இருக்கிறார். மேலும் இந்த ஒலிம்பியாட், தன்னை வெல்வது நம்பமுடியாத அளவிற்கு கடினமானது என்பதை வலுப்படுத்தியுள்ளார். ஒரு குளிர்-கண்கள் எதிர்ப்பு. அது அவருடைய கண்களின் முக்கிய உணர்ச்சியாக இருந்தது.

Chennai Chess Tamilnadu Sports International Chess Fedration
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment