Ranji Trophy | Mumbai vs Baroda, 2nd Quarter Final: 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 8 அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறின.
கால் இறுதி சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், கர்நாடகாவை வீழ்த்திய விதர்பா அணியும், பரோடாவை வீழ்த்திய மும்பையும், சவுராஷ்டிராவை வீழ்த்திய தமிழ்நாடும் மற்றும் ஆந்திராவை வீழ்த்திய மத்திய பிரதேச அணியும் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.
போட்டி டிரா - மும்பை தகுதி பெற்றது எப்படி?
இந்நிலையில், மும்பையில் நடந்த 2வது கால் இறுதிப் போட்டியில் மும்பை - பரோடா அணிகள் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி முதல் இன்னிங்சில் 384 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இதனையடுத்து, பரோடா அணி அதன் முதல் இன்னிங்சில் 348 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியது. 44 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி 132 ஓவர்களில் 569 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, 613 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பரோடா அணி 5வது ஆட்ட நேர முடிவில் 30 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. பரோடா அணி வசம் 7 விக்கெட் இருந்த நிலையில், போட்டி டிரா ஆனது. மேலும், முதல் இன்னிங்சில் 44 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சதமடித்து மிரட்டிய மும்பையின் லோ-ஆடர் வீரர்கள் - சாதனை
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் வெற்றிக்கு வித்திட்டவர்கள் லோ-ஆடர் வீரர்கள் என்றால் மிகையாகாது. மும்பை அணி 337 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்தபோது 10வது விக்கெட்டுக்கு தனுஷ் கோட்டியன் - துஷார் தேஷ்பாண்டே ஜோடி அமைத்தனர். மிகச்சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்த அவர்கள், அரைசதம், சதம் என விளாசி மிரட்டினார்கள். இந்த ஜோடி மட்டும் அந்த அணிக்கு 232 ரன்களை சேர்த்து கொடுத்தனர்.
115 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் கோட்டியன் தனது சதத்தை முதலில் எட்டினார். மறுபுறம், தேஷ்பாண்டே 112 பந்துகளில், 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் சதம் அடித்தார். இதுவே இரு வீரர்களின் முதல் தர சதம் ஆகும். 120 ரன்னில் கோட்டியன் அவுட் ஆனா நிலையில், 123 ரன்கள் எடுத்த தேஷ்பாண்டே ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்த நிலையில், பரோடாவுக்கு எதிரான ரஞ்சி டிராபி காலிறுதியில் கடைசி விக்கெட்டுக்கு ஒரே இன்னிங்ஸில் தல ஒரு சதங்களைப் பதிவு செய்ததன் மூலம், முதல் தர கிரிக்கெட் வரலாற்றில், இந்த சாதனையைப் படத்தை முதல் லோ-ஆடர் வீரர்கள் (நம்பர் 10 மற்றும் நம்பர் 11 ஜோடி) என்ற சாதனையைப் மும்பை ஆல்-ரவுண்டர்களான தனுஷ் கோட்டியான் மற்றும் துஷார் தேஷ்பாண்டே படைத்துள்ளனர்.
இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 200 ரன்களுக்கு மேல் எடுத்த 3வது இந்திய ஜோடி என்கிற பெருமையையும் பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் 249 ரன்கள் எடுத்த சர்வதே மற்றும் பானர்ஜி ஜோடி உள்ளது. 2ம் இடத்தில் 233 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்த அஜய் சர்மா மற்றும் மனிந்தர் சிங் ஜோடி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“