Advertisment

IPL Auction 2025 Highlight: நொடிக்கு நொடி விறுவிறுப்பு... உச்சம் தொட்ட நட்சத்திர வீரர்கள்; வரலாறு படைத்த 13 வயதான இளம் வீரர்!

IPL Auction 2025 Live Updates | CSK, LSG, GT, RR, MI, KKR, SRH, PBKS, DC, RCB Team 2025 Players List, Squad: ரிஷப் பண்ட் (ரூ.27 கோடி, லக்னோ), ஸ்ரேயாஸ் அய்யர் (ரூ.26¾ கோடி, பஞ்சாப்) ஆகியோர் ஐ.பி.எல். ஏல வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ipl auction live

18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில், இந்த தொடருக்கான வீரர்களின் 2 நாள் ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கிய நடைபெற்றது. 7 மணி நேரம் நடந்த முதல் நாள் ஏலத்தில் 24 வெளிநாட்டவர் உள்பட 72 வீரர்கள் மொத்தம் ரூ.467.95 கோடிக்கு விற்கப்பட்டனர். இதில், 20 வீரர்கள் ரூ.10 கோடிக்கு மேல் வாங்கப்பட்ட து வியப்பூட்டியது. ரிஷப் பண்ட் (ரூ.27 கோடி, லக்னோ), ஸ்ரேயாஸ் அய்யர் (ரூ.26¾ கோடி, பஞ்சாப்) ஆகியோர் ஐ.பி.எல். ஏல வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL Auction 2025 LIVE Updates, Day 2

இந்நிலையில், இன்று திங்கள்கிழமை நடந்த 2-ம் நாள் ஏலத்தில், ஐ.பி.எல். வரலாற்றில் மிக குறைந்த வயதில் ஏலப்பட்டியலில் இடம்பெற்றிருந்த வைபவ் சூர்யவன்ஷியை (வயது 13) ரூ. 1.1 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதேபோல், பிரியான்ஷ் ஆர்யா என்கிற அன்கேப்டு வீரரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 3.8 கோடிக்கு வாங்கியது. 

இதனிடையே, இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரை ரூ.10.75 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கியது. அதேநேரத்தில், சென்னை சூப்பர் அணிக்காக ஆடிய தீபக் சாஹரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.9.25 கோடிக்கு வாங்கியது. 

இந்த மெகா ஏலத்திற்காக 574 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 182 வீரர்களை 10 அணிகளும் வாங்கின. இதில் 62 வீரர்கள் வெளிநாட்டவர்கள் ஆவர். 8 வீரர்களுக்கு ஆர்.டி.எம் கார்டு பயன்படுத்தப்பட்டது. மொத்தமாக 10 அணிகளும் ரூ 639.15 கோடியை செலவிட்டுள்ளனர். 

ஆங்கிலத்தில் படிக்க: IPL Auction 2025 LIVE Updates: All eyes on Rishabh Pant, KL Rahul and Shreyas Iyer at mega auction

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Nov 25, 2024 22:34 IST
    அர்ஜுன் டெண்டுல்கரை வாங்கிய மும்பை 

    இந்திய வீரரும், சச்சின் டெண்டுல்கரின் மகனுமான அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை அணி அவரின் அடிப்படை விலையான ரூ. 30 லட்சத்துக்கு வாங்கியது. 



  • Nov 25, 2024 22:14 IST
    படிக்கல்லை வாங்கிய ஆர்.சி.பி.  

    இந்திய வீரர் தேவதத் படிக்கல்லை ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஆர்.சி.பி. அணி



  • Nov 25, 2024 22:13 IST
    ஏலம் போகாத அர்ஜுன் டெண்டுல்கர்!

    இந்திய வீரரும், சச்சின் டெண்டுல்கரின் மகனுமான அர்ஜுன் டெண்டுல்கரை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. கடந்த சீசன் வரை மும்பை அணிக்காக விளையாடி வந்தார். ஏலம் கேட்கப்பட்டபோது மும்பையிடம் ரூ. 1.85 கோடி மீதமிருந்த நிலையிலும் மீண்டும் அவரை அணியில் எடுக்க முயற்சிக்கவில்லை.



  • Nov 25, 2024 22:12 IST
    மற்றொரு தமிழக வீரரை வசப்படுத்திய சென்னை 

    வன்ஷ் பீடியை ரூ. 55 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி. மேலும், தமிழ்நாடு ரஞ்சி வீரர் ஆண்ட்ரே சித்தார்த்தை அடிப்படை விலையான ரூ.30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். 



  • Nov 25, 2024 21:22 IST
    13 வயது வீரரை வசப்படுத்திய ராஜஸ்தான்... கோடீஸ்வரர் ஆனார் வைபவ் சூர்யவன்ஷி!

    13 வயதான வைபவ் சூர்யவன்ஷி ஐ.பி.எல் ஏலத்தில் வரலாறு படைத்துள்ளார். ஐ.பி.எல் வரலாற்றில் 13 வருடம் 243 நாட்கள் வயதாகிய அவர், ராஜஸ்தான் ராயல்ஸால் ரூ 1.1 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இளைய வீரர் ஆனார். பீகாரின் இளம் வீரரான சூர்யவன்ஷி, 16 வருடங்களாக ஐ.பி.எல் ஏலப் பட்டியலில் இடம்பிடித்த இளைய வீரர் ஆவார். மேலும் அவர் இப்போது ஐபிஎல் அணி பட்டியலில் இடம்பெற்ற இளைய வீரர் ஆவார்.

     



  • Nov 25, 2024 20:50 IST
    விலை போகாத சர்ஃபராஸ்

    இந்திய வீரர் சர்ஃபராஸ் கானை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன் வரவில்லை,



  • Nov 25, 2024 20:25 IST
    ஏலத்தில் வாக்கப்படாத வீரர்கள் 

    வில் ஓ ரூர்க், லுங்கி என்கிடி, சேதன் சகாரியா, ஒட்னீல் பார்ட்மேன், தில்ஷன் மதுஷங்க, ஆடம் மில்னே ஆகிய வீரர்கள் வாங்கப்படவில்லை 



  • Nov 25, 2024 20:00 IST
    அடிப்படை விலைக்கு வாங்கப்பட்ட இங்கி., வீரர் 

    இங்கிலாந்து வீரர் பிரைடன் கார்ஸை அவரது அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். 



  • Nov 25, 2024 19:38 IST
    சென்னை அணியில் 3வது தமிழக வீரர் 

    தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரில் மதுரை பேந்தர்ஸ் அணிக்காக விளையாடும் பந்துவீச்சாளர் குர்ஜப்நீத் சிங்கை ரூ. 2.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

    சென்னை சேப்பாக்கத்தில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியின்போது விராட் கோலியை அவர் போல்ட் -அவுட் ஆக்கியது, அப்போது பேசுபொருளானது. 

    சென்னை அணியில் ஏற்கனவே அஸ்வின், சங்கர் என இரண்டு தமிழக வீரர்கள்  இருக்கு நிலையில், தற்போது  3வது வீரராக  குர்ஜப்நீத் சிங் வாங்கப்பட்டுள்ளார்.  



  • Nov 25, 2024 19:36 IST
    மிட்சல் சாண்ட்னரை வாங்கிய மும்மை 

     

    சி.எஸ்.கே அணிக்காக விளையாடி வந்த மிட்சல் சாண்ட்னரை அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது மும்பை இந்தியன்ஸ். 



  • Nov 25, 2024 18:52 IST
    உம்ரான் மாலிக்கிற்கு வந்த சோதனை 

    இந்திய அணியின் அதிவேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை வாங்க யாரும் முன்வரவில்லை. 



  • Nov 25, 2024 18:51 IST
    வில் ஜேக்ஸை ரூ. 5.25 கோடிக்கு வாங்கிய மும்பை 

    கடந்த சீசனில் பெங்களூரு அணியில் விளையாடிய வில் ஜேக்ஸை ரூ. 5.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை அணி.



  • Nov 25, 2024 18:29 IST
    சென்னனை  அணியால்  வாங்கப்பட்ட தீபக் ஹூடா 

    இந்திய வீரரான தீபக் ஹூடாவை சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி ரூ. 1.70 கோடிக்கு வாங்கியுள்ளது.
     



  • Nov 25, 2024 18:29 IST
    கேப்டு பேட்டர்கள்

    வெளிநாட்டு வீரர்களான டெவால்ட் ப்ரெவிஸ், பென் டக்கெட், ஃபின் ஆலன் ஆகியோர் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.



  • Nov 25, 2024 18:24 IST
    கொல்கத்தா அணிக்கு திரும்பிய மணிஷ் பாண்டே

    மணிஷ் பாண்டேவை கே.கே.ஆர் அணி ரூ.75 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. இதன் மூலம் அவர் கொல்கத்தா அணியுடன் மீண்டும் இணைகிறார்.  



  • Nov 25, 2024 18:15 IST
    முகேஷ் சவுத்ரியை 30 லட்சத்துக்கு வாங்கிய  சி.எஸ்.கே

    இந்திய இளம் வீரர்களான அர்ஷத் கானை ரூ. 1.30 கோடிக்கு குஜராத் அணியும், தர்ஷன் நல்கேண்டேவை ரூ. 30 லட்சத்திற்கு டெல்லி அணியும் வாங்கியுள்ளன.  

    முகேஷ் சவுத்ரி 30 லட்சத்துக்கு சி.எஸ்.கே அணியால் வாங்கப்பட்டார்.



  • Nov 25, 2024 18:10 IST
    ஏலம் போகாத வெளிநாட்டு வீரர்கள்  

    முஜீப் - உர் - ரஹ்மான், விஜயகாந்த் வியாஸ்காந்த், அகீன் ஹொசைன் மற்றும் அடில் ரஷீத் மற்றும் கேஷவ் மகராஜ் ஆகிய வெளிநாட்டு வீரர்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.  



  • Nov 25, 2024 18:08 IST
    மும்பை வீரரை தட்டித் தூக்கிய சென்னை

    மும்பை அணிக்காக விளையாடி வந்த ஆல்-ரவுண்டர் அன்ஷுல் கம்போஜை ரூ. 3.4 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்



  • Nov 25, 2024 18:04 IST
    தக்கவைக்கப்பட்ட ஷேக் ரஷீத் 

    இளம் வீரர் ஷேக் ரஷீதை அடிப்படை விலையான ₹ரூ. 30 லட்சத்தில் அணியில் தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். 



  • Nov 25, 2024 17:04 IST
    ஆப்கானிஸ்தான் வீரர் அல்லா கஸன்ஃபரை ரூ.4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை அணி

     ஆப்கானிஸ்தான் வீரர் அல்லா கஸன்ஃபரை ரூ.4.80 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அல்லா கஸன்ஃபர் அடிப்படை விலை ரூ.75 லட்சமாக இருந்த நிலையில், அல்லா கஸன்ஃபரை ரூ.4.80 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 



  • Nov 25, 2024 17:01 IST
    ஐ.பி.எல் ஏலத்தில் இவர்களை யாரும் வாங்கவில்லை

    2025 ஐ.பி.எல் மெகா ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாட்டு வீரர்களில் முக்கிய வீரர்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்திய வீரர்கள் ஷர்துல் தாக்கூர், பிரித்வி சர், மயங்க் அகர்வால், அஜிங்கியா ரகானே, வெளிநாட்டு கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் உள்ளிட்டோர் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.



  • Nov 25, 2024 16:54 IST
    புவனேஷ்வர் குமாரை ரூ.10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி

    வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரை ரூ.10.75 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது; அவரது அடிப்படை விலை ரூ. 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில்,  புவனேஷ்வர் குமாரை ரூ.10.75 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.



  • Nov 25, 2024 16:27 IST
    ஃபாஃப் டு பிளெஸ்ஸி-யை ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி

    தென் ஆப்பிரிக்கா வீரர் ஃபாஃப் டு பிளெஸ்ஸி-யை ரூ.2 கோடிக்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது; அவரது அடிப்படை விலை 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதே விலைக்கு டெல்லி அணி ஃபாஃப் டு பிளெஸ்ஸி-யை ஏலத்தில் வாங்கியது.



  • Nov 25, 2024 16:15 IST
    நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன்னை ஐ.பி.எல் ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை

    நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன்னை ஐ.பி.எல் ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை; அவரது அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கேன் வில்லியம்சன்னை ஐ.பி.எல் ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை.



  • Nov 25, 2024 16:12 IST
    மீண்டும் சென்னை அணிக்கு திரும்பினார் சாம் கரண்

    இங்கிலாந்து வீரர் சாம் கரனை ரூ.2.40 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது; ஐ.பி.எல் தொடரில் முதலில் சென்னை அணியில்தான் சாம் கரண் அறிமுகமனார். ஆனால், கடந்த சீசனில் பஞ்சாப் அணியில் விளையாடிய நிலையில், இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம் கரனை ரூ.2.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.



  • Nov 25, 2024 16:01 IST
    வாஷிங்டன் சுந்தரை ரூ.3.20 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி

    வாஷிங்டன் சுந்தரை ரூ.3.20 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது; இவருடை அடிபடை விலை ரூ.2 கோடியாக இந்த நிலையில், வாஷிங்டன் சுந்தரை ரூ.3.20 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.



  • Nov 25, 2024 05:45 IST
    இளம் வீரர் நமன் தீர்-ஐ ₹5.25 கோடிக்கு அணியில் தக்கவைத்தது மும்பை இந்தியன்ஸ்

    மும்பை இந்தியன்ஸ் அணி இளம் வீரர் நமன் தீர்-ஐ ₹5.25 கோடிக்கு அணியில் தக்கவைத்தது; இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலம் கேட்ட நிலையில், ஆர்.டி.எம் கார்டை பயன்படுத்தி அவரை மும்பை அணி அதே விலைக்கு பெற்றுக்கொண்டது.



  • Nov 25, 2024 05:43 IST
    கலீல் அகமது-வை ரூ.4.80கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலீல் அகமது-வை ரூ.4.80கோடிக்கு ஏலத்தில் எடுத்தது; அவரது அடிப்படை விலை ரூ. 2 கோடியாக இருந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலீல் அகமது-வை ரூ.4.80கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.



  • Nov 25, 2024 05:38 IST
    டெவான் கான்வேவை ரூ.6.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சி.எஸ்.கே அணி

    ஆஸ்திரேலிய அணி வீரர் டெவான் கான்வேவை ரூ.6.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது; அவருடைய அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், டெவான் கான்வேவை ரூ.6.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.



  • Nov 24, 2024 22:39 IST
    சி.எஸ்.கே வீரர் சமீர் ரிஸ்வியை ரூ.95 லட்சத்துக்கு வாங்கியது டெல்லி கேபிடல்ஸ்

    கடந்த சீசனில் சி.எஸ்.கே அணியால் ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட சமீர் ரிஸ்வியை, டெல்லி கேபிடல்ஸ் அணி தற்போது அவரை ரூ.95 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. சமீர் ரிஸ்வியின் அடிப்படை விலை ரூ.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி அவரை ரூ.95 லட்சத்திற்கு வாங்கியது.



  • Nov 24, 2024 22:29 IST
    விஜய் சங்கரை ரூ.1.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி

    விஜய் சங்கரை ரூ.1.20 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது; விஜய் சங்கரின் அடிப்படை விலை ரூ.30லட்சமாக இருந்த நிலையில், சென்னை அணி அவரை ரூ.1.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.



  • Nov 24, 2024 20:52 IST
    நியூஸிலாந்து வீரர் ட்ரென்ட் போல்ட்டை ரூ.12.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ்

    நியூஸிலாந்து வீரர் ட்ரென்ட் போல்ட்டை ரூ.12.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அவரது அடிப்படை விலை ரூ.2 கோடியாக இருந்த நிலையில், ட்ரென்ட் போல்ட்டை ரூ.12.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.



  • Nov 24, 2024 20:50 IST
    நட்டுவை ரூ.10.75 கோடிக்கு தட்டி தூக்கியது டெல்லி அணி

    தமிழக வீரர் நடராஜனை ரூ.10.75 கோடிக்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. கடந்த ஐ.பி.எல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய நிலையில், நடராஜனை டெல்லி அணி ஏலத்தில் எடுத்துள்ளது. நடராஜனின் அடிப்படை ஏல விலை ரூ. 2 கோடியாக இருந்த நிலையில் ரூ.10.75 கோடிக்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. 



  • Nov 24, 2024 20:46 IST
    ஆவேஷ் கானை ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி!  

    இந்திய வீரர் ஆவேஷ் கானை ரூ.9.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அவருடைய அடிப்படை ஏலத்தொகை ரூ.2 கோடியாக இருந்த நிலையில், ஆவேஷ் கானை ரூ.9.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.



  • Nov 24, 2024 20:42 IST
    தென்னாப்ரிக்க வீரர் அன்ரிச் நார்ட்ஜேவை ரூ.6.50 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா அணி

    தென்னாப்ரிக்க வீரர் அன்ரிச் நார்ட்ஜேவை ரூ.6.50 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது; அவரது அடிப்படை விலை ரூ.2 கோடியாக இருந்த நிலையில், அன்ரிச் நார்ட்ஜேவை ரூ.6.50 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது.



  • Nov 24, 2024 20:39 IST
    இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சரை ரூ.12.50 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

    இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சரை ரூ.12.50 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அவருடைய அடிப்படை விலை ரூ. 2 கோடியாக இருந்த நிலையில், ஜோஃப்ரா ஆர்ச்சரை ரூ.12.50 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. 



  • Nov 24, 2024 20:20 IST
    இஷான் கிஷனை ரூ.11.25 கோடிக்கு ஏலம் எடுத்தது ஐதரபாத் அணி

    இஷான் கிஷனை ரூ.11.25 கோடிக்கு ஐதரபாத் அணி ஏலத்தில் எடுத்தது; அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அவரை ரூ.11.25 கோடிக்கு ஐதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது.



  • Nov 24, 2024 20:16 IST
    டேவிட் வார்னரை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை

    கடந்த ஐ.பி.எல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரரை டேவிட் வார்னரை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை. எந்த அணி அவரை ஏலத்தில் எடுக்கும் என்பது இன்னும் தெரியவில்லை.



  • Nov 24, 2024 20:16 IST
    ராகுல் த்ரிப்பாட்டியை ரூ.3.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி

    ராகுல் த்ரிப்பாட்டியை ரூ.3.40 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ராகுல் த்ரிப்பாட்டியின் அடிப்படை விலை ரூ. 75 லட்சமாக இருந்த நிலையில், ரூ.3.40 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.



  • Nov 24, 2024 20:15 IST
    தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் -ஐ ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி

    தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் -ஐ ரூ.2 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. எய்டன் மார்க்ரம் அடிப்ப்டை விலை ரூ.2 கோடியாக் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அவரை ரூ.2 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. 



  • Nov 24, 2024 20:08 IST
    ஹர்ஷல் படேலை ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

    ஹர்ஷல் படேலை ரூ.8 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது. ரூ. 6.75 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இறுதியாக ஏலம் எடுத்த நிலையில், பஞ்சாப் அணி ஆர்.டி.எம் கார்டை பயன்படுத்தியது. ரூ. 8 கோடியாக ஏலத் தொகையை பஞ்சாப் அணி உயர்த்திய நிலையில், அந்த தொகையை கொடுத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது.



  • Nov 24, 2024 20:07 IST
    ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க்கை ஆர்.டி.எம் முறையில் ரூ. 9 கோடிக்கு தக்க வைத்தது டெல்லி கேபிடல்ஸ்

    ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க்கை ஆர்.டி.எம் முறையில் ரூ. 9 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி தக்க வைத்தது. இறுதியாக பஞ்சாப் அணி ரூ. 9 கோடிக்கு ஏலம் கேட்ட நிலையில், அதே விலைக்கு வாங்கியது டெல்லி அணி.



  • Nov 24, 2024 19:49 IST
    கிளென் மேக்ஸ்வெல்லை ரூ.4.20 கோடிக்கு கொத்திச் சென்றது பஞ்சாப் அணி

    ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல்லை ரூ.4.20 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. கிளென் மேக்ஸ்வெல் இந்திய அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிவர்.



  • Nov 24, 2024 19:45 IST
    ரச்சின் ரவீந்திராவை ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி

    நியூசிலாந்து அணியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வீரர் ரச்சின் ரவீந்திராவை சென்னை அணி ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. கடந்த சீசனிலும் ரச்சின் ரவீந்திரா சென்னை அணியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.



  • Nov 24, 2024 19:17 IST
    மண்ணின் மைந்தன் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை அணி

    மண்ணின் மைந்தன் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு சென்னை அணி ஏலம் எடுத்தது. தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை அணி ஏலத்தில் எடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



  • Nov 24, 2024 19:13 IST
    வெங்கடேஷ் ஐயரை ரூ.23.75 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா அணி 

    ஐ.பி.எல் அணிகள் கிரிக்கெட் வீரர்களை ஏலம் எடுக்கும் நடைமுறை நடந்து வருகிறது. கிரிக்கெட் விரர் வெங்கடேஷ் ஐயரை ரூ.23.75 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்துள்ளது.



  • Nov 24, 2024 18:23 IST
    விரைவில் தொடங்கும் அடுத்த சுற்று ஏலம்

    இரண்டு சுற்றுகள் ஏலம் நடைபெற்ற நிலையில், அடுத்த சுற்று ஏலம் விரைவில் தொடங்கவுள்ளது.



  • Nov 24, 2024 17:30 IST
    கே.எல். ராகுலை தட்டித் தூக்கிய டெல்லி அணி

    கே.எல். ராகுலை ரூ. 14 கோடிக்கு டெல்லி அணி ஏலம் எடுத்துள்ளது.



  • Nov 24, 2024 17:27 IST
    முகமது சிராஜை ஏலம் எடுத்த குஜராத் அணி

    முகமது சிராஜை ரூ. 12.25 கோடிக்கு குஜராத் அணி ஏலம் எடுத்தது.



  • Nov 24, 2024 17:13 IST
    ரூ. 18 கோடிக்கு ஏலம் போன சாஹல்

    சாஹலை ரூ. 18 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது.



Csk Ipl Auction Ipl Cricket Ipl Auction Live Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment