Indian teenage Grandmaster Rameshbabu Praggnanandhaa during Tata Chess Open. (Photo: Twitter/tatasteelchess)
Tata Steel Chessm - Rameshbabu Praggnanandhaa Tamil News: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2023 செஸ் போட்டி நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா கலந்து கொண்டுள்ளார். இப்போட்டியில் நடந்த 3 3 சுற்றுகளில் பிரக்ஞானந்தா ட்ரா செய்தார்.
Advertisment
இந்த நிலையில், பிரக்ஞானந்தா தனது 4வது சுற்றில் உலகின் நம்பர் 2 வீரரான டிங் லிரனை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 73வது நகர்த்தல்களின் முடிவில் உலகின் நம்பர் 2 வீரரை பிரக்ஞானந்தா வீழ்த்தினார். மேலும், இந்த சுற்று முடிவில் 2.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா 4வது இடத்தையும் பிடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை டச்சு வீரர் அனிஷ் கிரி தோற்கடித்து முதலிடத்தை பிடித்துள்ளார். இதனால், 2 புள்ளிகளுடன் 7வது இடத்திற்கு கார்ல்சன் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். மறுபுறம் கிரி இதுவரை டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் வென்றதில்லை.
Advertisment
Advertisements
இந்நிலையில், வருகிற வியாழக்கிழமை நடைபெறும் 5வது சுற்றில் அனிஷ் கிரியை இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா எதிர்கொள்கிறார்.தொடர்ந்து ஜனவரி 28 அன்று நடைபெறும் 12வது சுற்றில் உலக சாம்பியன் கார்ல்சனுடன் மோதுகிறார். ஜனவரி 29ம் தேதியுடன் டாடா ஸ்டீல் செஸ் போட்டி நிறைவு பெறுகிறது.