Advertisment

இனி விவோ இல்லை; ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராகிறது டாடா குழுமம்

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக டாடா குழுமம் வருகிறது, என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் கூறியுள்ளார்

author-image
WebDesk
New Update
இனி விவோ இல்லை; ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராகிறது டாடா குழுமம்

Tata group to replace Vivo as IPL title sponsor from this year: இந்தியாவின் மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமம், சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான விவோவை இந்த ஆண்டு முதல் இந்தியன் பிரீமியர் லீக்கின் டைட்டில் ஸ்பான்சராக மாற்றத் தயாராக உள்ளது என, ஐபிஎல் நிர்வாகக் குழு செவ்வாயன்று நடந்த கூட்டத்தில் முடிவு செய்தது.

Advertisment

"ஆமாம், ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக டாடா குழுமம் வருகிறது," என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு உறுதிப்படுத்தினார். Vivo 2018-2022 வரை டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமைகளுக்காக ரூ. 2200 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது, ஆனால் 2020ல் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த கல்வான் பள்ளத்தாக்கு ராணுவ மோதலுக்குப் பிறகு, டைட்டில் ஸ்பான்சராக Dream11ஐ மாற்றியதன் மூலம் விவோ ஒரு வருடத்திற்கு ஓய்வு எடுத்தது.

இருப்பினும், விவோ 2021 இல் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக திரும்பியது, அவர்கள் உரிமைகளை பொருத்தமான ஏலதாரருக்கு மாற்ற விரும்புவதாக ஊகங்கள் பரவியபோதும், டாடா நிறுவனத்திற்கு மாற்றும் நடவடிக்கைக்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ipl Cricket Cricket Tata
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment