பெஸ்ட் மேட்ச் வின்னர் அஸ்வின்: இந்திய பவுலிங் கோச் திடீர் பாராட்டு
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, இந்தியா இதுவரை உருவாக்கிய சிறந்த மேட்ச் வின்னர்களில் அஸ்வினும் ஒருவர் என்று கூறி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, இந்தியா இதுவரை உருவாக்கிய சிறந்த மேட்ச் வின்னர்களில் அஸ்வினும் ஒருவர் என்று கூறி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சு மன்னன் ரவிச்சந்திரன் அஸ்வின் மொத்தமாக 12 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார்.
Ravichandran Ashwin - Paras Mhambrey Tamil News: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் கடந்த 12ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Advertisment
இந்த போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சு மன்னன் ரவிச்சந்திரன் அஸ்வின் மொத்தமாக 12 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார். மேலும், பல்வேறு சாதனைகளை படைத்தும், முறியடுத்தும் உள்ளார். அவருக்கு ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, இந்தியா இதுவரை உருவாக்கிய சிறந்த மேட்ச் வின்னர்களில் அஸ்வினும் ஒருவர் என்று கூறி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
Advertisment
Advertisements
இதுதொடர்பாக பராஸ் மாம்ப்ரே செய்தியாளர்களிடம் பேசுகையில், “அஸ்வின் எவ்வளவு மதிப்புமிக்கவர் என்பதை ஒரு அணியாக நாங்கள் உணர்கிறோம். என் கருத்துப்படி, அவர் இந்தியாவின் சிறந்த மேட்ச் வின்னர். அவரைப் போன்று மேட்ச் வின்னர்கள் வெகு சிலரே இருந்துள்ளனர். அவர் எங்களுக்கு வெற்றி பெற உதவிய போட்டிகளின் எண்ணிக்கையை நான் என்ன சொல்ல முடியும்.
முதல் நாள் நாங்கள் இங்கு (டொமினிகா) வந்தபோது, ஆடுகளம் சற்று வறண்டது. உள்ளூர் விளையாட்டுகளின் புள்ளிவிவரங்களைச் சரிபார்த்தபோது அந்த விளையாட்டுகளில் ஸ்பின்னர்களின் ஆதிக்கம் இருந்தது. ஆட்டம் முன்னேறும்போது பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்தோம். மற்ற விஷயம் என்னவென்றால், விக்கெட்டை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதுதான். அவர்கள் பேட்டிங் செய்தார்கள், நாங்களும் பேட்டிங் செய்திருக்கிறோம், நாங்கள் செய்ததை அணிகள் நீண்ட காலத்திற்கு பேட் செய்யக்கூடிய சூழ்நிலைகள் இருந்தன. பந்து வீச்சாளர்கள் பின்னர் வந்து செயல்படுவதற்கான அடித்தளத்தை அது உருவாக்கியது. அஸ்வினும் ஜடேஜாவும் பின்னர் வந்து பந்துவீசிய விதம் பாராட்டுக்குரியது” என்று அவர் கூறினார்.
இங்கிலாந்தின் லண்டனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி இந்திய அணியில் அஸ்வின் இடம் பெறவில்லை என்பது குறிப்பித்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil