அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. வெஸ்ட் இண்டீசின் பிரிட்ஜ்டவுனில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை வென்றது.
தாயகம் திரும்பிய இந்தியா
இந்திய அணியின் இந்த வெற்றி மூலம், 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. போட்டி ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தாலும், பார்படாஸில் பெரில் புயல் காரணமாக இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. புயல் ஜமைக்காவை நோக்கி நகர்ந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் நேற்று புதன்கிழமை இந்தியா புறப்பட்டனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Team India T20 World Cup Celebration Live Updates
இந்நிலையில், இந்திய அணி வீரர்கள் அனைவரும் இன்று காலை தலைநகர் டெல்லி வந்தடைந்தனர். கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ரசிகர்கள் அதிகாலை முதலே டெல்லி விமான நிலையத்தில் திரளாக குவிந்தனர். அதன்பிறகு அவர்களுக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.
மோடியுடன் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து, இந்திய அணி வீரர்கள் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தனர். உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து இன்று மாலை மும்பையில் இந்திய வீரர்கள் பேரணியாக, திறந்த வெளி பஸ்ஸில் டி20 உலகக்கோப்பையுடன் பயணித்தனர்.
திறந்த வெளி பஸ் பேரணி
மாலை 4 மணிக்கு மும்பை நாரிமன் பாயிண்டில் உள்ள தேசிய கலைநிகழ்ச்சி மையத்தில் இருந்து வான்கடே மைதானம் வரை சுமார் 2 கிலோ மீட்டருக்கு அணிவகுப்பு நடைபெற உள்ளது. வான்கடே மைதானத்தில் பி.சி.சி.ஐ சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் என்றும், முதலில் வருபவர்கள் என்ற அடிப்படையில் அனுமதி கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வான்கடே மைதானத்தின் நுழை வாயில்கள் சரியாக மாலை 4 மணி முதல் திறக்கப்படும்.
மும்பையில், போக்குவரத்து போலீசார் தெற்கு மும்பையில் ஏழு சாலைகளை போக்குவரத்துக்காக மூடியுள்ளனர், அதே நேரத்தில் 10 சாலைகளில் வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்டது.
உற்சாக வரவேற்பு
இந்நிலையில், மும்பை நகரை அடைந்த டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள். கடற்கரையை ஒட்டிய மரைன் டிரைவ் பகுதிகள் ரசிகர்கள் வெகுவாக திரண்டு கடல் அலைபோல் காட்சியளிக்கிறார்கள். இதேபோல், இந்திய அணிக்கு பாராட்டு விழா நடக்கும் வான்கடே மைதானத்திலும் ரசிகர்கள் திரளாக குவிந்துள்ளார்கள். அவர்களின் ஆர்ப்பரிப்பு விண்ணை முட்டி வருகிறது.
MARINE DRIVE HAS GONE CRAZY. 🤯🇮🇳 pic.twitter.com/v0Aa1CYCv5
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 4, 2024
THE CELEBRATIONS HAVE STARTED OUTSIDE WANKHEDE STADIUM. 🌟pic.twitter.com/vHCKsLUhai
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 4, 2024
ROHIT SHARMA NATION. 🐐pic.twitter.com/dWogLreyvO
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 4, 2024
ITS RAINING AT THE WANKHEDE STADIUM. 🌧️pic.twitter.com/DRimimDDTx
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 4, 2024The aerial view of Marine Drive. 🇮🇳 pic.twitter.com/VwnyA0FfkP
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 4, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.