Asia Cup 2023 - Team India Tamil News: இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. பாகிஸ்தான் மண்ணில் நடக்கும் தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், இலங்கையில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை 2023க்கு முன்னதாக இந்திய அணி அதன் வீரர்களின் பயிற்சியை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த அணி தற்போது பெங்களூருவின் கிரிக்கெட் அகாடமியில் உள்ளது, அங்கு அவர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பிசிசிஐ தனது சமூக ஊடகங்களில் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், விராட் கோலி, கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா போன்றவர்கள் பயிற்சியில் ஈடுபட்டதை காணலாம்.
கே.எல். ராகுல் முழு உடற்தகுதிக்கு நெருக்கமாக இருப்பதாகத் தெரிகிறது. அவர் விக்கெட் கீப்பிங் பயிற்சிகளைச் செய்வதை வீடியோவில் காணலாம். முன்னதாக, முகாமின் முதல் நாளில், ராகுல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேட்டிங் செய்தார், ஆனால் கீப்பிங் பயிற்சியில் பங்கேற்கவில்லை. இருப்பினும், அவர் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திற்கு எதிரான இந்தியாவின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் கூறியுள்ளார்.
அயர்லாந்து தொடரில் 11 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்குத் திரும்பிய ஜஸ்பிரித் பும்ரா, இந்திய இளம் தொடக்க வீரரான சுப்மான் கில்-லுக்கு பந்துவீசினார். இதேபோல், வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜ் விராட் கோலிக்கு ஷார்ட் -பிட்ச் பந்துகளை வீசி குடைச்சல் கொடுத்தார். ஆனால் அந்த சவாலில் இருந்து பின்வாங்காத கோலி சிராஜ் வீசிய பந்துகளை ஆன்-சைட்டில் விரட்டியடித்தார். இந்த பயிற்சியின் போது முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோரும் பங்கேற்று இருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“