Teams to beat Chennai Super Kings in both League matches in IPL Tamil News: இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ஹெவிவெயிட் சாம்பியன் அணியாக விளையாடி வருகிறதுசென்னை சூப்பர் கிங்ஸ். எம்எஸ் தோனி தலைமையிலான இந்த அணி, 4 முறை சாம்பியன் பட்டத்தை வாகை சூட்டியுள்ளது. மேலும், 16 சீசன்களில் 14 முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. தொடரில் 2வது வெற்றிகரமான அணியாகவும், கிட்டத்தட்ட ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் சிறந்த சாதனை படைத்த அணியாகவும் சென்னை இருந்து வருகிறது.

லீக் ஆட்டத்தில் 2 முறையும் சி.எஸ்.கே-யை வீழ்த்திய அணிகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒவ்வொரு அணிக்கும் எதிராக லீக்கில் சிறந்த சாதனை படைத்துள்ளது. ஆனால் சில சமயங்களில் பல அணிகள் சிறப்பாக விளையாடி வருகின்றன. இரண்டு லீக் ஆட்டங்களிலும் அவர்கள் ஒரு அணியால் தோற்கடிக்கப்பட்ட பல போட்டிகள் உள்ளன. அவ்வகையில், சென்னைக்கு எதிராக வெற்றி அடைந்த அணிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
இரண்டு லீக் ஆட்டங்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்திய முதல் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியாக இருந்து வருகிறது. அந்த அணி 2008 ஆம் ஆண்டு லீக்கின் தொடக்கப் பதிப்பில் இந்த சாதனையை அடைந்தனர். அந்த ஆண்டு லீக்கில் சென்னையை வீழ்த்தி பட்டத்தை வென்றனர்.
இப்போது தொடரில் விளையாடாத டெக்கான் சார்ஜஸ் அணி, 2009ல் சாம்பியன் பட்டம் வென்றனர். அந்த அணி 2010ல் சென்னை சூப்பர் கிங்ஸை இரண்டு முறை தோற்கடித்தனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் (பஞ்சாப் கிங்ஸ்) 2012ல் 5வது லீக்கில் இந்த சாதனையை அடைந்தனர். மும்பைக்கு எதிராக சென்னை அணி இரண்டு தோல்விகளை சந்தித்ததும் அதே ஆண்டில் தான்.

2013ல் மும்பை இந்தியன்ஸ் மீண்டும் சிறப்பாக இருந்தது. ஏனெனில் அவர்கள் அந்த சீசனில் இரண்டு முறை சென்னையை வீழ்த்தி, அந்த சீசனில் பட்டத்தை வென்றனர். 2014 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் மீண்டும் இரண்டு முறை சென்னையை வீழ்த்தியது. மும்பைக்கு முன்பு 2019ல் மீண்டும் அதைச் செய்தது.
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் 2020ல் சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்தன. 2022ல் பஞ்சாப் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தோற்கடித்தன. தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் 2023ல், இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சாதனையை எட்டியுள்ளது.
லீக் ஆட்டத்தில் 2 முறையும் சி.எஸ்.கே-யை வீழ்த்திய அணிகள் பட்டியல் பின்வருமாறு:
ராஜஸ்தான் ராயல்ஸ் – (2008)
டெக்கான் சார்ஜஸ் – (2010)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் – (2012)
மும்பை இந்தியன்ஸ் – (2012)
மும்பை இந்தியன்ஸ் – (2013)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் – (2014)
மும்பை இந்தியன்ஸ் – (2019)
டெல்லி கேபிடல்ஸ் – (2020)
ராஜஸ்தான் ராயல்ஸ் – (2020)
டெல்லி கேபிடல்ஸ் – (2021)
பஞ்சாப் கிங்ஸ் – (2022)
குஜராத் டைட்டன்ஸ் – (2022)
ராஜஸ்தான் ராயல்ஸ் – (2023)*
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil