கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை பார்சிலோனாவின் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் விளையாட்டு போட்டிகள் தடை செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த ஜூலை மாதம் முதல் விளையாட்டு போட்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ரசிகர்களுக்கு அனுமதி இல்லாமல் வீரர்கள் அனைவரும் உயிர்பாதுகாப்பு வலையத்திற்கு விளையாட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது மிகவும் கொடூரமானது, இது மிகவும் மிகவும் மோசமான உணர்வு. அரங்கத்தில் அனைவரையும் பார்ப்பது ஒரு பயிற்சி போன்றதுதான். ரசிகர்களின் வருகை இல்லாத கால்பந்து ஆட்டம் தனது இயல்பை இழந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பின் போது, பாதியில் நிறுத்தப்பட்ட லாலிகா கால்பந்து தொடரில், 11 ஆட்டங்களுடன் முதலிடத்தில் இருந்த பார்சிலோனா அணி, கொரோனா பாதிப்பு காரணமாக ரசிகர்கள் இல்லாமல் வெற்று அரங்கங்களில் மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது, ரியல் மாட்ரிட் அணியிடம் தொடரை இழந்தது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக்கில் பேயர்ன் முனிச் அணியுடன் மோதிய பார்சிலோனா அணி 8-2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.
இதன் மூலம் கடந்த 33 ஆண்டுகளில் இல்லாத அளவில் பார்சிலோனா மிக மோசமான தோல்வியை சந்த்தது. தற்போது நடைபெற்றுவரும் லா லிகா போட்டியில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 33 வயதான மெஸ்ஸி 2007/08 சீசனுக்கு பிறகு தனது மோசமான சீசனை பதிவு செய்துள்ளார். அந்த சீசனில், அனைத்து போட்டிகளிலும் அவர் ஒன்பது கோல்களை மட்டுமே அடித்தார், அவற்றில் ஐந்து கோல்கள் பெனால்டி வாய்ப்பில் பெறப்பட்டதாகும்.
இது குறித்து மெஸ்ஸி கூறுகையில், “உண்மை என்னவென்றால் இது மிகவும் மோசமானது. நீங்கள் யாரை எதிர்த்து விளையாடுகிறீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் விளையாடினால் வெற்றி பெறுவது மிகவும் கடினம், ”என்று தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் கால்பந்து நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. போட்டிகளில் நீங்கள் இதைக் காணலாம். ரசிகர்களை மீண்டும் மைதானத்திற்கு வந்தால்தான் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"