உலக கோப்பை இன்றைய போட்டியில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 410 ரன்கள் குவித்தது.
இந்திய அணியின் ஸ்ரேயாஷ் ஐயர் 94 பந்துகளில் 128 ரன்னும், கே.எல். ராகுல் 64 பந்துகளில் 102 ரன்னும் குவித்தனர். மேலும் ரோகித் சர்மா, விராத் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
இந்தப் போட்டியில் 47.5 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த நெதர்லாந்து 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் தேஜா நிதமனுரு 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார்.
இந்தப் போட்டியில் 9 ஓவர்கள் வீசிய பும்ரா 2 விக்கெட்டும், 6 ஓவர்கள் வீசிய முகம்மது சிராஜ் 2 விக்கெட்டும், 10 ஓவர்கள் வீசிய குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், 9 ஓவர்கள் வீசிய ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
6 ஓவர்கள் வீசிய முகம்மது ஷமிக்கு ஒரு விக்கெட்டும் கிடைக்கவில்லை. எனினும் இந்திய பேட்டர்களான விராத் கோலி, சுப்மன் கில், சூர்ய குமார் யாதவ் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரும் பந்து வீசினர்.
இதில் 3 ஓவர்கள் வீசிய விராத் கோலி 13 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். 2 ஓவர்கள் வீசிய சுப்மன் கில் 11 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
மறுபுறம் 2 ஓவர்கள் வீசிய சூர்ய குமார் 17 ரன்னும் 0.5 பந்துகள் வீசிய ரோகித் சர்மா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“