கோயம்புத்தூரில் ஆகஸ்ட் 20ஆம் தேதி சிற்றுளி மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து மாற்றுத்திறனாளிகளின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் "ரன் ஃபார் வீல்" எனும் மாரத்தான் போட்டியை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கங்கா முதுகுத்தண்டு - வட முறிவு மறுவாழ்வு மைய வளாகத்தில் நடத்த உள்ளது.
இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கங்கா முதுகுத்தண்டுவட முறிவு மறுவாழ்வு மைய அரங்கில் நடைபெற்றது.
இதில் கங்கா மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ராஜசேகர் மற்றும் சிற்றுளி தலைவர் குணசேகரன் ஆகியோர் பேசினர்
அப்போது அவர், “ஸ்போர்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை அனைத்து தரப்பினரிடையே கொண்டு சேர்க்கும் வகையில் கோவையில் "ரன் ஃபார் வீல்" மாரத்தான் நிகழ்வை நடத்துவதாகவும், இதில் மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி சாதாரண பொதுமக்களும் கலந்து கொள்ள உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
மேலும், “இதில் சிறப்பு விருந்தினர்களாக,கோவை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளனர் என்றும் இந்த ஆண்டு புனேவில் நடைபெற்ற தேசிய பாராலிம்பிக் தடகளப் போட்டியில் பல்வேறு பதக்கங்களை வென்ற தமிழக பாரா தடகள வீரர்களை கவுரவிக்க உள்ளோம்” என்றார்.
தொடர்ந்து, “இந்த மாரத்தான் போட்டியின் முடிவில் தமிழ்நாடு சக்கர நாற்காலி கூடைப்பந்து அணியின் முன்னணி வீரர்கள் கலந்து கொள்ளும் ஆற்றல் மிக்க சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி நடைபெற உள்ளது” எனக் கூறினார்கள்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“