The Rock is coming to UFC Dana White confirms recently - தமிழ் ரசிகர்களைக் கட்டிப் போட்ட 'தி ராக்'! - மீண்டும் UFC களத்தில்
ரெஸ்ட்லிங் போட்டிகளை பார்ப்பவர்கள், பார்க்காதவர்கள், அப்படி என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்குக் கூட தெரியும் பெயர் 'தி ராக்'.... இயற்பெயர் டுவைன் ஜான்சன்.
Advertisment
எத்தனையோ ரெஸ்ட்லிங் வீரர்களுக்கு ரசிகர்கள் இருந்தாலும், அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்க்க வைத்த ஒரே வீரர் ராக் என்றால் மிகையல்ல.
ரெஸ்ட்லிங் தவிர்த்து சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகு, ஏகத்துக்கும் எகிறியது இவரது மார்க்கெட் வேல்யூ.
Advertisment
Advertisements
இந்நிலையில், Ultimate Fighting Championship என்றழைக்கப்படும் UFC அமைப்பின் தலைவர் டேனா வைட், இத்தொடரில் ராக் கலந்து கொள்ளவிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
நவம்பர் 2ம் தேதி நடக்கவுள்ள UFC 244 மெயின் நிகழ்வில், ராக் கலந்து கொண்டு, ஜோர்ஜ் மஸ்விடல் மற்றும் நேட் டயஸ் மோதவிருக்கும் போட்டியில், வெற்றியாளருக்கு "BMF" பெல்ட் மதிப்பான $50,000 வழங்கவிருக்கிறார்.
“அவர் வரப் போகிறார். அவர் என் வேலையை எடுத்துக்கொள்கிறார். கேளுங்கள், தி ராக் என்ன விரும்புகிறாரோ, அதை தி ராக் தி பெறுகிறார்." என்று டேனா வைட் கூறியுள்ளார்..
போட்டியில் பங்கேற்கிறாரோ இல்லையோ, மீண்டும் களத்துக்கு திரும்பியிருக்கும் தங்கள் விண்டேஜ் ராக்கை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news