/tamil-ie/media/media_files/uploads/2023/08/Magnus-Carlsen.jpg)
உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் இரண்டாவது சுற்றில் கார்ல்சன்-பிரக்ஞானந்தா மோதியபோது எடுத்த படம்.
செஸ் உலக கோப்பை போட்டிகள் அஜர்பைஜானில் நடைபெற்றுவருகின்றன. இறுதி ஆட்டத்தில் கார்ல்சன்-பிரக்ஞானந்தா ஆகியோர் மோதுகின்றனர்.
இந்த ஆட்டத்தில் முதல் சுற்று ஆட்டம் டையில் முடிந்தது. இரண்டாம் சுற்று ஆட்டம் இன்று மாலை விறுவிறுப்பாக தொடங்கிநடைபெற்றது.
If so, Magnus has spent the day thinking of the tiebreak whilst Prag can only start to do so after the game.@FIDE_chess
— Viswanathan Anand (@vishy64theking) August 23, 2023
இந்த ஆட்டத்தில் கார்ல்சனுக்கு தொடக்கம் முதலே பிரக்ஞானந்தா சவாலாக விளங்கினார். அவரால் மூவிங் செய்வது கடினமாக இருந்தது.
இந்த நிலையில் இரண்டாம் சுற்று ஆட்டமும் டையில் முடிந்துள்ளது. முன்னதாக, இது தொடர்பாக ட்விட்டரில், “இறுதிப்போட்டியின் 2வது சுற்றும் டிராவில் முடிவடையும் நிலை உருவாகும். ஒருநாள் முழுக்க உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் டை பிரேக்கரை பற்றிய எண்ணத்துடன் இருந்துள்ளார்.
ஆனால் பிரக்ஞானந்தா ஆட்டம் தொடங்கிய பின்னரே டை பிரேக்கரை பற்றி சிந்திப்பார்” எனத் தெரிவித்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் பிரக்ஞானந்தா கறுப்பு நிற காய்களுடன் ஆடினார்.
தொடர்ந்து 16 நகர்வுகள் முடிவடைந்த பின்னரும் கார்ல்சனால் எந்தவொரு அதிர்வையும் ஏற்படுத்தவில்லை. பொறுமையாக விளையாடி வரும் தமிழக வீரர் பிரக்ஞானந்தா ஆட்டத்தின் கட்டுப்பாட்டை கையில் வைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.