உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்த அதிரடி வீரர்களின் சரவெடி ஆட்டத்தை காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்...
12வது உலககோப்பை கிரிக்கெட் தொடர், வரும் 30ம் தேதி கோலாகலமாக துவங்க உள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகள் இணைந்து இந்த தொடரை நடத்த உள்ளது. இதுவரை டி20 போட்டிகளே, வெள்ளை பந்தை கொண்டு நடைபெற்று வந்த நிலையில், தற்போது முதன்முறையாக ஒருநாள் கிரிக்கெட் தொடரும் நடைபெற உள்ளது.
இந்த வெள்ளை பந்து, பேட்ஸ்மேன்கள் அதிகளவில் ரன்அடிக்க உதவுகிறது. இதன்காரணமாக, ஹேண்ட் பவர் மிக்க பவுலர்கள் கூட, டி20 போட்டிகளில் அதிகளவில் ரன்கள் எடுப்பதை நாம் பார்த்திருக்கிறோம். பவுலர்களுக்கு இந்த வெள்ளை பந்து அசகாயசூரனாக தான் திகழ்ந்து வருகிறது. இதனிடையே, இந்த உலககோப்பை கிரிக்கெட் தொடரில், வெள்ளை பந்து பயன்படுத்தப்படுவதால், பேட்ஸ்மேன்கள் அதிரடி ரன்குவிப்பின் மூலம், மைதானத்தில் ரசிகர்களுக்கு வானவேடிக்கை காட்ட தீர்மானித்துள்ளனர்.
ஒவ்வொரு அணியிலிருந்தும் வீரர்களின் திறமையை கருத்தில் கொண்டு வகைப்படுத்தியுள்ளோம்...
ஹர்திக் பாண்டியா ( இந்தியா)
டி20 போட்டிகளில் கேம் பினிஷராக திகழ்ந்து வருகிறார். 7வது நபராக இறங்கினாலும் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும் திறமையை, கடந்த ஐபிஎல் தொடரிலேயே எல்லோரும் கண்டிருக்கலாம்.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில், ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாண்டால், இந்திய அணி நிச்சயமாக 330-340 என்ற ரன்களை எட்டும். இந்த கிரிக்கெட் தொடரில், ஹர்திக்கின் பங்கு சிறப்பானதாகவே இருக்கும் என நம்புவோம்.
ஜோஸ் பட்லர் ( இங்கிலாந்து)
சொந்த மண்ணிலேயே தொடர் நடைபெறுவதால், ஜோஸ் பட்லர் சாதிக்க சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பராக திகழும் பட்லர், டி20 போட்டியில், அணி எந்த நிலையில் இருந்தாலும், அதை வெற்றிப்பாதைக்கு கொண்டு சேர்ப்பதில் வல்லவர். நடந்து முடிந்த பாகிஸ்தானிற்கு எதிரான தொடரில், 50 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
மார்கஸ் ஸ்டோய்னிஸ் ( ஆஸ்திரேலியா)
ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கையளிக்கும் இளம் வீரர் ஸ்டோய்னிஸ். டி20 போட்டியில் இவரின் பங்கு, அணியை எப்போதும் வெற்றிப்பாதைக்கு இட்டுச்சசெல்கிறது. ஆறாவது நபராக களமிறங்கினாலும், மற்ற வீரர்களுடன் இணைந்து ரன்கள் எடுப்பதில் இவருக்கு நிகர் இவர் தான்.
ஆண்ட்ரூ ரசல் ( வெஸ்ட் இண்டீஸ்)
டி20 கிரிக்கெட்டின் அபாயகரமான பேட்ஸ்மேன் யாரெனில் அது ரசல் தான் என்று கிரிக்கெட் தெரிந்த அனைவரும் அறிவர். 20 ஓவர் போட்டிகளில் சாதித்த ரசல். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் சாதிப்பார் என அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.