உலககோப்பை கிரிக்கெட் திருவிழா இன்னும் சில தினங்களில் கோலாகலமாக துவங்க உள்ளது. இதற்காக கிரிக்கெட் வீரர்களை விட, அணி ரசிகர்களே அதிகளவில் தயாராகி வருகின்றனர்.
இங்கிலாந்தில் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதால், அங்கு நிலவும் வறண்ட வானிலை சுழல் பந்துவீச்சாளர்களுக்கு போட்டி சாதகமாக அமையும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
கீழ்க்கண்ட 4 சுழல்பந்துவீச்சாளர்கள், தங்களது சுழல் சாட்டையால், அணிக்கு வெற்றிக்கனியை பறித்து தருவரா என்று தொடர்ந்து பார்ப்போம்.
ஆடம் ஜம்பா ( ஆஸ்திரேலியா)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் . கடந்த 1 ஆண்டிலேயே, இவரது அணியின் வெற்றிக்கான பங்களிப்பு, சக வீரர்களை மட்டுமல்லாது, மூத்த வீரர்களையும் இவர் பக்கம் ஈர்த்துள்ளது.
இவரது மெதுவான மற்றும் துல்லியமான பவுலிங், பேட்ஸ்மேன்களை நிலைகுலையவைத்துள்ளது. இதனால், அணியில் மிக குறுகிய காலத்திலேயே நீங்கா இடம் பிடித்தார். இன்றையநிலையில், கிரிக்கெட் உலகின் சிறந்த ஸ்பின்னராக ஜம்பா திகழ்ந்து வருகிறார்.
ரஷீத் கான் ( ஆப்கானிஸ்தான்)
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் மட்டுமல்லாது நம்பிக்கை நட்சத்திரமுமாகவும் திகழ்ந்து வருபவர் ரஷீத் கான் . டி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். 20 வயதே ஆன ரஷீத் கான், டி20 தரவரிசையில் முதலிடம் மட்டுமல்லாது, ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் சர்வதேச அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
இம்ரான் தாஹிர் ( தென் ஆப்ரிக்கா)
உலககோப்பை கிரிக்கெட் தொடருடன் ஓய்வை அறிவிக்க உள்ள தென் ஆப்ரிக்காவின் இம்ரான் தாஹிர், உலககோப்பை கிரிக்கெட்டில் ஜொலிப்பார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 40 வயதான தாஹிர், ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நான்காம் இடத்தில் உள்ளார்.
குல்தீப் யாதவ் ( இந்தியா)
குல்தீப் யாதவ், சஹல் கூட்டணி, உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவிற்கு வெற்றியை தன்வசமாக்கி தருவர் என்று உலகேம எதிர்பார்த்து காத்துள்ளது. கடந்த இங்கிலாந்து தொடரில் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட்டதால், இம்முறையும் அவரின் பங்களிப்பு வலுவானதாகவே இருக்கும். இந்திய அணி வாகை சூட உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.