ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவின.
சிஎஸ்கே அணி முதல் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொண்டது.
முதல் ஆட்டத்தில் விக்கெட் கீப்பர் தோனி அரை சதம் பதிவு செய்து அசத்திய போதிலும் அந்த அணி தோல்வியைத் தழுவியது.
ருதுராஜ் கெய்க்வாட், கான்வே, உத்தப்பா, அம்பதி ராயுடு ஆகிய தொடக்க ஆட்டக்காரர்கள் சோபிக்காத காரணத்தினாலாயே அந்த அணி முதல் ஆட்டத்தில் பெரிய ஸ்கோரை எட்டிப் பிடிக்க முடியாது தடுமாறிப்போனது.
இதேபோல் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் களம் கண்ட லக்னோ, குஜராத் அணிகள் கடந்த 28ஆம் தேதி மோதின. இதில், ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது.
சிஎஸ்கேவைப் போலவே, லக்னோ அணியிலும் தொடக்க ஆட்டக்காரர்கள் பெரிதளவில் சோபிக்கவில்லை. கேப்டன் கே.எல்.ராகுல், குவின்டன் டி காக், லீவிஸ், மணீஷ் பாண்டே ஆகியோர் அடித்து விளையாட தவறினர்.
சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தீபக் ஹூடாவும், ஆயுஷ் பதோனியும் மட்டுமே அரை சதம் பதிவு செய்து அசத்தினர். அதனால், லக்னோ-சிஎஸ்கே அணிகள் டாப் பேட்டிங் ஆர்டரை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
முதல் ஆட்டத்தில் சில காரணங்களால் விளையாடமல் போன இங்கிலாந்து வீரர் மொயீன் அலி, இந்த லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கேவில் இடம்பிடிக்கிறார். இவர் ஆல்-ரவுண்டர் என்பதால் அணிக்கு மேலும் பலம் கூடும்.
சிஎஸ்கே-லக்னோ அணிகள் இன்றைய ஆட்டத்தில் மோதுகின்றன. இரு அணிகளுமே முதல் வெற்றியை நோக்கி விளையாடுவதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
சிஎஸ்கே அணி வீரர்கள்: எம்.எஸ்.தோனி, ஜடேஜா (கேப்டன்), மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட், டுவைன் பிராவோ, தீபக் சாஹர், அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா, மிட்செல் சாண்ட்னர், கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே, டெவன் கான்வே, ஷிவம் துபே, டுவைன் பிரெடோரியஸ், மஹீஷ் தீக்ஷனா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், துஷார் தேஷ்பாண்டே, கே.எம். ஆசிஃப், சி ஹரி நிஷாந்த், என் ஜெகதீஷன், சுப்ரன்ஷு சேனாபதி, கே பகத் வர்மா, பிரசாந்த் சோலங்கி, சமிர்ஜீத் சிங், முகேஷ் செளத்ரி.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்: கே.எல்.ராகுல், மனன் வோரா, எவின் லீவிஸ், மணீஷ் பாண்டே, குவின்டன் டி காக், ரவி பிஷ்ணோய், துஷ்மந்தா சமீரா, ஷாபாஸ் நதீம், மோசின் கான், மயங்க் யாதவ், அங்கித் ராஜ்பூத், அவேஷ் கான், ஆண்ட்ரூ டை, மார்கஸ் ஸ்டாய்னிஸ், கைல் மேயர்ஸ், கரண் சர்மா, கிரிஷ்ணப்பா கெளதம், ஆயுஷ் பதோனி, தீபக் ஹூடா, குருணால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil