தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய் அணி 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை வீழ்த்தி முதல் முறையாக தாமஸ் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வந்தது. தாமஸ் கோப்பை இறுதிப்போட்டி இன்று (மே 15) நடைபெற்றது. இதில், இந்திய அணியும் பலம் வாய்ந்த இந்தோனேசிய அணியும் மோதியது. இறுதி போட்டி முடிவில் இந்திய அணி 3-0 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேசிய அணியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது.
பாங்காக்கில் நடந்து வந்த தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில், நேற்றைய தினம் ஆண்களுக்கான அரை இறுதி போட்டியில், இந்திய அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியனான டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், பிரனாய் (ஒற்றையர் பிரிவு), சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி (இரட்டையர் பிரிவு) ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து, இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இந்தோனேசியாவுடன் மோதியது. இதில் இந்திய அணி இந்தோனேஷிய அணியை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம், இந்தி அணி 73 ஆண்டுகால தாமஸ் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"