/indian-express-tamil/media/media_files/EjNCY9EXbIFiJTgPVp48.jpg)
பாரிஸ் பாராஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 11 பதக்கங்களை வென்றுள்ளது
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. கடந்த 28 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடரில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Paris Paralympics 2024 Day 5 Live Updates
இந்நிலையில், பாரிஸ் பாராஒலிம்பிக் பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் ஒற்றையர் எஸ்.யு. 5 பிரிவின் இறுதிப்போட்டி மற்றும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டியில் இந்தியாவின் துளசிமதி முருகேசன், சீனாவின் க்யு ஹ்யா யங் உடன் மோதினார்.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் துளசிமதி முருகேசன் 17-21, 10-21 என்ற செட் கணக்கில் க்யு ஹ்யா யங்கிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். வெற்றி பெற்ற க்யு ஹ்யா யங் தங்கப்பதக்கம் வென்றார்.
இதே பிரிவில் (பெண்கள் ஒற்றையர் எஸ்.யு. 5 பிரிவு) வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் மனிஷா ராமதாஸ், டென்மார்க்கின் கேத்ரின் ரோசன்கிரென் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட மனிஷா ராமதாஸ் 21-12, 21-8 என்ற செட் கணக்கில் கேத்ரின் ரோசன்கிரெனை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்றார்.
இந்தியாவுக்காக வெள்ளி வென்ற துளசிமதி முருகேசன் மற்றும் வெண்கலம் வென்ற மனிஷா ராமதாஸ் ஆகிய இரண்டு வீராங்கனைகளும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த இரண்டு வீராங்கனைகளுக்கு வென்ற பதக்கங்களின் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. இந்தியா இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 11 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.