Advertisment

ஒலிம்பிக், கடல்சார், பாரா தடகள விளையாட்டு மையங்கள்: விளையாட்டு துறை பட்ஜெட் அறிவிப்பு

'தமிழகத்தில் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்'என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
TN Budget 2024 Thangam Thennarasu announcement for Sports Tamil News

'இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ. 440 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Tamil Nadu Budget | Thangam Thennarasu: 2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் பல்வேறு சிறப்பம்சங்கள் குறித்து அவர் உரையாற்றினார். மேலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 

Advertisment

விளையாட்டு துறை தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பில், "இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ. 440 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 இடங்களில் ஒலிம்பிக் மண்டலங்கள் அமைக்கப்பட்டு 2024ம் ஆண்டுக்குள் ஒலிம்பிக்கிற்கு தமிழகத்தில் இருந்து 50 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும். 

சென்னை, மதுரை, திருச்சி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நான்கு ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.  இப்பயிற்சி மையங்கள் இறகுப்பந்து, கையுந்து பந்து, கூடைப்பந்து, தடகளம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உலகத்தரமிக்க பயிற்சிகளை வழங்குவதுடன் விளையாட்டு அறிவியலுக்கான மையங்களாகவும் செயல்படும்.

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.2.5 கோடியில் கெனாயிங் மற்றும் கயாக்கிங் நீர் விளையாட்டுகளுக்கான முதன்மை நிலை மையம்  அமைக்கப்படும். இறகுபந்து மற்றும் மேஜைப்பந்து விளையாட்டிற்கான முதன்மை நிலை மையங்கள் 13 கோடியே 33 லட்ச ரூபாய்  செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. 

ராமநாதபுரத்தில் கடல் சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும். இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாதமி (Tamil Nadu Olympic Water Sports Academy) ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரப்பன்வலசையில் அமைக்கப்படும்.

முதலமைச்சரின் இளைஞர் திருவிழாக்கள் தமிழ்நாடெங்கும் நடத்தப்படும். இளைஞர்களின் கலைத் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பேச்சு, பாட்டு, இசை, நடனம் என பன்முகப் போட்டிகள் நடத்தப்படும். 

கிரிக்கெட், கையுந்து பந்து, கால்பந்து, இறகுப்பந்து, சிலம்பம் என 33 விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சிக்கான கருவிகள் அடங்கிய கலைஞர் விளையாட்டு தொகுப்புகள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வழங்கப்படும்.

தமிழகத்தில் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்" அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Thangam Thennarasu Tamil Nadu Budget
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment