Advertisment

ரஞ்சி போட்டிகளில் சொதப்பிய தமிழ்நாடு; 6 ஆண்டுகளுக்குப் பிறகு புச்சி பாபு கிரிக்கெட் தொடங்கும் பின்னணி

புச்சி பாபு அகில இந்திய அழைப்பு கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) வருகிற 15ம் தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 11ம் தேதி வரை நடக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNCA reviving Buchi Babu in four-day format Tamil News

கவாஸ்கர் தனது சன்னி டேஸ் புத்தகத்தில், தனக்காக சுமார் 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் ரசிகர்கள் காத்திருந்து ரயில் நிலையத்திற்கு வந்தனர் என்றும், அவர் பேட்டிங் செய்ய வந்தபோது, ​​ஆடுகளத்திற்குள் படையெடுக்கும் ரசிகர்களைத் தடுக்க போலீசார் அவர் கிரீஸுக்கு செல்லும் வரை பாதுகாப்பு கொடுக்க வேண்டியிருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

'தென்இந்திய கிரிக்கெட்டின் தந்தை' என்று அழைக்கப்பட்ட மறைந்த புச்சிபாபு நினைவாக அகில இந்திய அழைப்பு கிரிக்கெட் போட்டி இந்தியாவில் உள்நாட்டு போட்டியாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியானது ரஞ்சி கோப்பையை விட ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பழமையானது. "புச்சி பாபு" என்று அழைக்கப்படும் மொதவரபு வெங்கட மஹிபதி நாயுடு காலமான (1908ல்) ஒரு வருடத்திற்குப் பிறகு 1909-10ல் இப்போட்டியின் முதல் சீசன் தொடங்கியது.

Advertisment

அவர்களின் தந்தையின் நினைவாக அவரது மூன்று மகன்களான எம் பாலையா நாயுடு, சி ராமசாமி - முன்னாள் இந்திய வீரர்கள் - மற்றும் வெங்கடராமனுஜுலு ஆகியோரால் தொடர்ந்து நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உள்ளூர் அணிகளை மட்டுமே கொண்டிருந்த இந்த தொடர் 1960களில் அகில இந்திய அழைப்பாக மாறியது. அதுமுதல் போட்டியின் மீதான ஆர்வமும் அதிகரித்தது. புச்சி பாபு போட்டியின் மூலம் தான், 1971 ஆம் ஆண்டு சென்னையிலும், பிறகு சென்னையிலும் இருந்த ரசிகர்கள், சுனில் கவாஸ்கரை முதன்முதலில் விளையாடுவதைக் கண்டனர்.

கவாஸ்கர் தனது சன்னி டேஸ் புத்தகத்தில், தனக்காக சுமார் 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் ரசிகர்கள் காத்திருந்து ரயில் நிலையத்திற்கு வந்தனர் என்றும், அவர் பேட்டிங் செய்ய வந்தபோது, ​​ஆடுகளத்திற்குள் படையெடுக்கும் ரசிகர்களைத் தடுக்க போலீசார் அவர் கிரீஸுக்கு செல்லும் வரை பாதுகாப்பு கொடுக்க வேண்டியிருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"ஒரு கல்லூரி மைதானத்தில் இவ்வளவு பேரை நான் பார்த்ததில்லை. நீங்கள் சேப்பாக்கத்தில் பார்த்திருக்கலாம். ஆனால் ஒரு கல்லூரியில் சாத்தியம் இல்லை. நான் கிரீஸுக்கு போலீசாரால் அழைத்துச் செல்லப்பட வேண்டியிருந்தது, இதற்கு முன்பு எங்கும் நடந்ததாக நான் நினைக்கவில்லை. ஆனாலும், தேநீர் இடைவெளியில் மக்கள் களத்தில் குவிவார்கள். அந்த நாளையும் அந்த கூட்டத்தையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. நெருக்கமான எல்.பி.டபிள்யூ கூச்சலில் இருந்து தப்பினேன். நான் ஏன் அவுட் இல்லை என்று நடுவரிடம் கேட்டேன்? 'அதில் என்ன தவறு? அது ஸ்டம்பில் அடிக்கும்’ என்றேன், அதற்கு நடுவர், ‘நான் உங்களுக்கு அவுட் கொடுத்திருந்தால், நான் என்னுடை வீட்டிற்கு செல்ல முடியாது' என்று பதிலளித்தார்." என்று அந்த புத்தகத்தில் கவாஸ்கர் எழுதி இருந்தார். இப்போட்டியில் அவர் 75 ரன்கள் வரை எடுத்து இருந்தார்.

இந்த போட்டி தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிரிஸ் ஸ்ரீகாந்த் பேசுகையில், "நான் ஏழாம் வகுப்பு பையனாக இருந்தேன், அவர் விளையாடுவதை அப்போது தான் முதன்முறையாகப் பார்த்தேன். புச்சி பாபு உள்நாட்டு சீசனுக்கான வாய்ப்பை உயர்த்தியது. கவாஸ்கர், ஜிஆர் விஸ்வநாத், ரோஜர் பின்னி, ரவி சாஸ்திரி, சந்தீப் பாட்டீல், சையத் கிர்மானி போன்றவர்கள் தொடர்ந்து இடம்பெற்று வந்தோம். எஸ்பிஐ அணி, ஏசிசி, நிர்லான் என அனைத்தும் வலுவான அணிகளை களமிறக்கியது. இந்த அணிகளுக்கு எதிராக நாங்கள் சிறப்பாக செயல்பட விரும்பினோம், அது எங்களுக்கு ஒரு சிறந்த கற்றல் வளைவாகவும் வெளிப்பாட்டாகவும் இருந்தது. இந்தப் போட்டியில் நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டால், உடனடியாக அகில இந்திய அளவில் அங்கீகாரம் பெறுவீர்கள். இது இந்தியாவின் மிகப்பெரிய முதல் வகுப்பு அல்லாத போட்டியாகும். ஒவ்வொரு வருடமும் மும்பை வீரர்கள் வந்து போட்டியில் வெற்றி பெற்று செல்வார்கள்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் புச்சி பாபு தொடரை உயிர்ப்பிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பெரிய லீக் கிரிக்கெட்டில் இது ஒரு படியாகும். புச்சி பாபுவின் மறுமலர்ச்சி முதல்தர கிரிக்கெட்டின் மறுமலர்ச்சிக்கு முக்கியமானது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஐ.பி.எல்-லில் மட்டுமே விளையாட வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அதை நான்கு நாள் வடிவமாக புதுப்பிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். " என்று அவர் கூறினார்.

போட்டி எப்போது ஆரம்பம்?

புச்சி பாபு அகில இந்திய அழைப்பு கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) வருகிற 15ம் தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 11ம் தேதி வரை நெல்லை, கோவை, சேலம், நத்தம் ஆகிய இடங்களில் நடக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானம் தயார்படுத்தப்பட்டு வருவதால் முதல்முறையாக புச்சி பாபு கிரிக்கெட் சென்னைக்கு வெளியே நடத்தப்படுகிறது.

2016-17 சீசன், தமிழ்நாடு பிரீமியர் லீக் வருகையால் இப்போட்டி இடம் பெறத் தவறியது. தற்போது 6 ஆண்டுக்கு பிறகு திரும்பும் இந்த போட்டியில் 12 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன், இந்தியன் ரெயில்வே, திரிபுரா, 'பி' பிரிவில் அரியானா, பரோடா, மத்திய பிரதேசம், 'சி' பிரிவில் மும்பை, டெல்லி, ஜம்மு-காஷ்மீர், 'டி' பிரிவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் கேரளா, பெங்கால் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் 4 பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

வருகிற 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடக்கும் தொடக்க ஆட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன்- இந்தியன் ரெயில்வே (இடம்: கோவை), அரியானா-பரோடா (நத்தம்), மும்பை-டெல்லி (சேலம்), தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன்- கேரளா (நெல்லை) ஆகிய அணிகள் மோதுகின்றன.

இறுதிப்போட்டி கோவையில் (செப்.8-11) அரங்கேறுகிறது. 2 கோடி செலவில் நடத்தப்பட உள்ள இந்த போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.3 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.2 லட்சமும், ஆட்டநாயகனுக்கு ரூ.10 ஆயிரமும், தொடர்நாயகனுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஐ. பழனி கூறுகையில், மாநில அணிகளிடமிருந்து ஏராளமான ஆர்வம் இருப்பதாகவும், ஜார்கண்ட் அணியை சேர்க்க எம்.எஸ் தோனியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டியிருந்தது என்றும் கூறினார். “எம்எஸ் தோனி ஜார்கண்டை சேர்க்க விரும்பினார். ஆனால், அட்டவணை மிகவும் இறுக்கமாக இருந்தது. எங்களிடம் ஏற்கனவே 12 அணிகள் உள்ளன. எனவே எங்களால் அவர்களுக்கு இடமளிக்க முடியவில்லை. சத்தீஸ்கர் மற்றும் சர்வீசஸ் அணிகள் கூட பங்கேற்க விரும்பின. அணிகள் இந்த நிகழ்வை முன் சீசனுக்குத் தயாராக பயன்படுத்துவதால், கோயம்புத்தூர், சேலம், திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் போட்டிகளை நடத்துவதற்கு நாங்கள் தேர்வு செய்துள்ளோம், ஏனெனில் இது வீரர்களுக்கு நல்ல தயாரிப்புகளை வழங்கும்." என்று கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Sunil Gavaskar Tamilnadu Cricket Association
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment