/tamil-ie/media/media_files/uploads/2022/07/FY_J0XSaUAA8Eh-.jpg)
Tamil Nadu Premier League 2022, CSG vs LKK Live Streaming Details: தமிழ்நாட்டின் ஐபிஎல் என்று கொண்டாடப்படும் தமிழ்நாடு பிரிமீரியர் லீக் 2022 இறுதிப்போட்டி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கும் லைகா கோவை கிங்ஸ் அணிக்கும் இடையே கோவையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணிக்கு நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 17 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் சாய் சுதர்சன், 42 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் கங்கா ஸ்ரீதர் ராஜு 17 பந்துகளில் 27 ரன்களும், கேப்டன் ஷாருக்கான் 22 ரன்களும் எடுத்தனர்.
139 ரன்கள் இலக்குடன் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது திடீரென மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை இருந்த காரணத்தால் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
இதன்மூலம், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணி மொத்தம் 4 முறை டிஎன்பிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதேநேரம் கோவை அணி வென்ற முதல் டிஎன்பிஎல் கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.