TNPL 2023: 5 Players to watch out Tamil News: 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இந்தத் தொடரில் பால்சி திருச்சி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் சீகம் மதுரை பேந்தர்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் களமாடுகின்றன.
இந்த தொடர் கோவை, திண்டுக்கல் சேலம் திருநெல்வேலி ஆகிய நான்கு நகரங்களில் இறுதிப்போட்டி உட்பட 32 போட்டிகள் நடைபெறுகிறது. தொடரின் குவாலிஃபையர் – 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் சேலத்திலும், குவாலிஃபையர் -2 மற்றும் இறுதிப்போட்டி திருநெல்வேலியிலும் நடைபெறவுள்ளது. பிளே ஆஃப் ஆட்டத்தில் மழை பெய்தால் ‘ரிசர்வ் டே’-வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று கோவையில் நடைபெறும் முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், நடப்பு டி.என்.பி.எல் தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 5 வீரர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
ஏலத்தில் அவரை 6.75 லட்சத்திற்கு வாங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக இந்திய சர்வதேச அணி களமிறங்கவுள்ளது. தக்கவைக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஷ்வினுடன் சேர்ந்து, அவர்கள் டாக்டருக்கு ஒரு கொடிய ஜோடியை உருவாக்குவார்கள்.
- வருண் சக்கரவர்த்தி
இந்திய வீரரான வருண் சக்கரவர்த்தியை ஏலத்தில் 6.75 லட்சத்திற்குதிண்டுக்கல் டிராகன்ஸ் அணி வாங்கியது. அந்த அணியில் ஏற்கனவே தக்கவைக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வினுடன் சேர்ந்து அவரும் விக்கெட் வேட்டை நடத்துவார் என்று எதிர்பார்க்கலாம். நடந்து முடிந்த ஐபிஎல் 2023 தொடரில் கொல்கத்தா அணியில் களமாடிய வருண் சக்கரவர்த்தி 14 ஆட்டங்களில் 8.15 என்ற எகானமி ரேட்டில் 20 விக்கெட்டுகளை எடுத்தார்.
கொல்கத்தா அணி பிளேஆஃப்-க்கு தகுதி பெறவில்லை என்றாலும், தனது அணிக்காக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார் வருண். மாயாஜால சுழற்பந்து வீச்சாளராக அறியப்படும் அவர் கடந்த ஆண்டு டி.என்.பி.எல் தொடரில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிக்காக 7 ஆட்டங்களில் விளையாடி இருந்த அவர் 7.08 என்ற எகானமி ரேட்டில் 8 விக்கெட்டுகளை எடுத்தார். அவர் தனது ஐபிஎல் 2023 ஃபார்மை டி.என்.பி.எல் தொடரிலும் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- விஜய் சங்கர்
இந்திய வீரரான விஜய் சங்கரை ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி ஏலத்தில் 10.25 லட்சத்துக்கு வாங்கியது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியில் களமாடி இருந்த சங்கர் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக காயம் காரணமாக தவித்து வந்த அவர், தற்போது அதிலிருந்து முழுதுவமாக மீண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
ஐபிஎல் 2023ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி 143.5 ஸ்டிரைக் ரேட்டில் 10 போட்டிகளில் 301 ரன்களை எடுத்த இருந்தார். தமிழக அணியின் ஆல்ரவுண்டர் வீரரான ஒரு பேட்ஸ்மேனாகவே விளையாடி வருகிறார். இம்முறை டி.என்.பி.எல் தொடரில் ஆல்ரவுண்டராக கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
- ஆர் அஸ்வின்
இந்திய சுழல் மன்னரான அஸ்வின் டி.என்.பி.எல் தொடரில் ஆடும் மூத்த வீரராக உள்ளார். திண்டுக்கல் டிராகன்களால் தக்கவைக்கப்பட்ட அவர், ஐபிஎல் 2023 தொடரில் வழக்கம் போல் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் 13 ஆட்டங்களில் வெறும் 7.51 என்ற எகானமி ரேட்டில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ராஜஸ்தான் அணிக்காக சில முக்கியமான கேமியோக்களை விளையாடியதால், பேட்டிங் துறையில் அவரின் பங்களிப்பு பெரிதும் மேம்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கு முன்னதாக, அஸ்வின் சில ஒயிட்-பால் கிரிக்கெட்டில் விளையாட விரும்புவார். அதற்கு இந்த டி.என்.பி.எல் தொடர் பெரிதும் உதவும். பல ஆண்டுகளாக டி.என்.பி.எல் போட்டிகளில் அவர் அதிகம் விளையாடவில்லை. அஸ்வின் 13 ஆட்டங்களில் 17 விக்கெட்டுகளையும், 10 இன்னிங்சில் 267 ரன்களையும் எடுத்துள்ளார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளரான நடராஜனை பால்சி திருச்சி அணி ஏலத்தில் 6.25 லட்சத்திற்கு வாங்கியது. முழங்கால் காயம் கடந்த சில ஆண்டுகளாக தவித்து வரும் அவர் முழுதுவமாக மீண்டுள்ளார். ஐபிஎல் 2023 இல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக 9.11 என்ற எகானமி ரேட்டில் 12 ஆட்டங்களில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைகா சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ள அவர் டி.என்.பி.எல் தொடர் மூலம் இந்திய அணிக்கு தேர்வான வீரர் என்கிற பெருமையை பெற்றுள்ளார். அவர் சிறந்த ஃபார்மில் இல்லாவிட்டாலும், நடராஜன் புதிய பந்தில் இன்னும் சிறப்பாக பந்துவீசி 'யார்க்கர் மன்னன்' என்ற தனது அடைமொழியை தக்கவைத்து வருகிறார். அதனால், நடப்பு டி.என்.பி.எல் தொடரிலும் பந்துவீச்சில் மிரட்டுவார் என நம்பலாம்.
- சாய் சுதர்ஷன்
நடப்பு டி.என்.பி.எல் தொடருக்கான ஏலத்தில் சாய் சுதர்ஷனை லைகா கோவை கிங்ஸ் 21.6 லட்சத்துக்கு வாங்கியது. அதன் மூலம், டி.என்.பி.எல் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட முதல் வீரர் ஆனார் சாய் சுதர்ஷன். ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் 8 இன்னிங்ஸ்களில் 362 ரன்கள் எடுத்துள்ளார். குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 47 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து மிரட்டி இருந்தார். எனினும், அவரது அணியை தோல்வியை தழுவியது.
இருப்பினும், சாய் சுதர்ஷனின் அதிரடியான ஆட்டம் பலராலும் பெரிதும் வரவேற்கப்பட்டது. அணிக்கு மிடில் ஆர்டரில் பலம் சேர்க்கும் அவரது ஆட்டம் சிறந்த ஃபினிஷராக உருவெடுக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளது. அவர் டி.என்.பி.எல் சிறப்பாக விளையாடி 17 போட்டிகளில் 694 ரன்கள் எடுத்துள்ளார். அவர் தனது ஐபிஎல் தொடர் ஃபார்மை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.