/tamil-ie/media/media_files/uploads/2023/07/tamil-indian-express-2023-07-11T200537.642.jpg)
டி.என்.பி.எல் 2023: கோவை கிங்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதல்
TNPL 2023: Lyca Kovai Kings vs Nellai Royal Kings, Final Tamil News: தமிழகத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 7வது டி.என்.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் திருநெல்வேலியில் நாளை (12- ந் தேதி) இரவு 7.15 மணிக்கு அரங்கேறும் இறுதிப்போட்டியில் கோவை கிங்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி 2-வது முறையாக டி.என்.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி கடந்த ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் இணைந்து கூட்டாக சாம்பியன் பட்டம் பெற்றது. கோவை அணி லீக் ஆட்டத்தில் நெல்லையிடம் 181 ரன் குவித்தும் தோல்வி கண்டது. அதற்கு இறுதி போட்டியில் பதிலடி கொடுக்க தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த அணி இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்றுள்ளது இங்கு நினைவுகூரத்தக்கது.
அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் தனது முதல் இறுதிப் போட்டியிலே சாம்பியன் பட்டத்தை உச்சிமுகரும் வேட்கையில் உள்ளது. கோவையை லீக் ஆட்டத்தில் வென்று இருந்ததால் நெல்லை அணி நம்பிக்கையுடன் விளையாடும். அதோடு, உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு ராயல் கிங்சுக்கு கூடுதல் பலமாக உள்ளது. இந்த இரு அணிகளும் சமபலத்தில் உள்ளதால், இறுதிப்போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.