TNPL 2023, Match 2, Salem Spartans vs Chepauk Super Gillies Tamil News: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று முதல் தொடங்கியது. கோவையில் நடைபெற்ற முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் – ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 70 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில், கோவையில் இன்று நடைபெற்ற போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் – சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள்மோதியது.
இந்த போட்டியில் டாஸ் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சேப்பாக் அணியில் பிரதோஷ் பவுல் ஜகதீசன் ஆகியோர் இன்னிங்சை தொடங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய நிலையில், முதல் விக்கெட்டுக்கு 9.1 ஓவர்களில் 91 ரன்கள் சேர்த்தபோது ஜகதீசன் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் அபாரஜித் 29 ரன்களும், அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த பரதோஷ் பவுல் 88 ரன்களும் குவித்து ஆட்டமிழந்த நிலையில் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய சஞ்சய் யாதவ் 12 பந்துகளில் 31 ரன்கள் குவித்து அசத்தினார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்துள்ளது.
தொடர்ந்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சேலம் ஸ்பார்ட்ன்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், ஆகாஷ் சும்ரா 24 ரன்களும், கௌசிக் காந்தி 23 ரன்களும் எடுத்த நிலையில், இறுதிக்கட்டத்தில் அதிரடியாவில் கலக்கிய முகமது அதான் கான் 15 பந்துகளில் 1 பவுண்டரி 6 சிக்சருடன் 47 ரனகள் குவித்தார்.
மறங்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் சேலம் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்து 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சேப்பாக் அணி தரப்பில் அபாரஜித், விஜய் அருள், ராக்கி பாஸ்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்:
சேலம் ஸ்பார்டன்ஸ்:
எஸ் அபிஷிக், கௌசிக் காந்தி, ஆர்எஸ் மோகித் ஹரிஹரன், அமித் சாத்விக் (விக்கெட் கீப்பர்), மான் பாஃப்னா, சன்னி சந்து, அபிஷேக் தன்வார் (கேப்டன்), முஹம்மது அட்னான் கான், சச்சின் ரதி, எம் கணேஷ் மூர்த்தி, ஆகாஷ் சும்ரா.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்:
பாபா அபராஜித் (கேப்டன்), எஸ் ஹரிஷ் குமார், என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), பிரதோஷ் பால், ரஹில் ஷா, ராஜகோபால் சதீஷ், ராமலிங்கம் ரோஹித், சஞ்சய் யாதவ், உத்திரசாமி சசிதேவ், எம் சிலம்பரசன், எம் விஜு அருள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil