TNPL News: டாப் பேட்ஸ்மேன் யார்? சாய் சுதர்சன்- அபராஜித் நெருக்கமான போட்டி

இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள சாய் சுதர்சன் 82.33 சராசரியில் மற்றும் 169.18 ஸ்ட்ரைக் ரேட்டில் 247 ரன்கள் எடுத்துள்ளார்.

இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள சாய் சுதர்சன் 82.33 சராசரியில் மற்றும் 169.18 ஸ்ட்ரைக் ரேட்டில் 247 ரன்கள் எடுத்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPL 2023: Most Runs and Most Wickets standings

TNPL 2023: Most Runs and Most Wickets standings Tamil News: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் 7வது டி.என்.பி.எல் (தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023) டி20 கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதிபெறும்.

Advertisment

இந்நிலையில், இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள திண்டுக்கல் அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 4 போட்டிகளில் விளையாடியுள்ள கோவை மற்றும் சேப்பாக் அணிகளில் 6 புள்ளிகளுடன் கோவை 2ம் இடத்திலும், 4 புள்ளிகளுடன் சேப்பாக் 3வது இடத்திலும் உள்ளன. இதேபோல், 4 புள்ளிகளை பெற்றுள்ள நெல்லை அணி 4வது இடத்தில் உள்ளது.

டாப் பேட்ஸ்மேன் யார்?

இந்த தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர்களுக்கான பட்டியலில் கோவை அணி வீரரான சாய் சுதர்சன் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 82.33 சராசரியில் மற்றும் 169.18 ஸ்ட்ரைக் ரேட்டில் 247 ரன்கள் எடுத்துள்ளார். 2வது இடத்தில் உள்ள பாபா அபராஜித் 53.67 சராசரியில் மற்றும் 145.05 ஸ்ட்ரைக் ரேட்டில் 161 ரன்களை எடுத்துள்ளார்.

Advertisment
Advertisements

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களுக்கான பட்டியலில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள வருண் சக்கரவர்த்தி 8.38 என்ற எக்கனாமி ரேட்டில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். 4 போட்டிகளில் விக்கெட்டுகளை 7 கைப்பற்றியுள்ள ஷாரு கான் 8.00 என்ற எக்கனாமி ரேட்டுடன் 2ம் இடத்தில் உள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Tnpl

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: