TNPL 2023: Nellai Royal Kings vs Salem Spartans, 13th Match Tamil News: தமிழகத்தில் 7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விவரம்:
சேலம் ஸ்பார்டன்ஸ் : அமித் சாத்விக் (விக்கெட் கீப்பர்), ஆகாஷ் சும்ரா, மான் பாஃப்னா, கௌசிக் காந்தி, ஆர் கவின், எஸ் அபிஷிக், முகமது அட்னான் கான், சச்சின் ரதி, சன்னி சந்து, அபிஷேக் தன்வார் (கேப்டன்), ரவி கார்த்திகேயன்
நெல்லை ராயல் கிங்ஸ் : பி சுகேந்திரன், லக்ஷ்மேஷா சூர்யபிரகாஷ், அருண் கார்த்திக் (கேப்டன்), லக்ஷய் ஜெயின் எஸ், சோனு யாதவ், ரித்திக் ஈஸ்வரன் (விக்கெட் கீப்பர்), அஜிதேஷ் குருசாமி, என்எஸ் ஹரிஷ், எம் பொய்யாமொழி, சந்தீப் வாரியர், எஸ் மோகன் பிரசாத்.
சேலம் பேட்டிங்
சேலம் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அமித் 2 ரன்களிலும், கவின் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கௌசிக் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து, 51 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த மான் பஃப்னா அதிரடியாக ஆடி 19 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய அபிஷேக் 12 ரன்களிலும், ஆதன் கான் 10 ரன்களிலும் இருந்தப்போது மழைக் குறுக்கிட்டது. இதனால் சேலம் அணியின் ஆட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது சேலம் அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்திருந்தது. நெல்லை தரப்பில் ஜெயின் 2 விக்கெட்களையும் ஹரீஷ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் நெல்லை அணிக்கு 16 ஓவர்களில் 129 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நெல்லை பேட்டிங்
நெல்லை அணியில் தொடக்க ஆட்டக்காராக களமிறங்கிய அருண் கார்த்திக் டக் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் நிரஞ்சன் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அஜிதேஷ் சிறப்பாக விளையாடி 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரித்திக் 18 ரன்களிலும், சோனு யாதவ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் நெல்லை அணி 86 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருந்தது. அடுத்து களமிறங்கிய சூர்ய பிரகாஷ் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசி ரன் குவித்தார். இதனால் நெல்லை அணிக்கு கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது. மறுமுனையில் ஆடிய சுகேந்திரன் முதல் பந்தில் சிக்சர் அடித்தார். பின்னர் இருவரும் தலா 1 ரன் அடிக்க நெல்லை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நெல்லை அணி 15.4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. சேலம் தரப்பில் அபிஷேக் 2 விக்கெட்களையும், சச்சின், கணேஷ், ஆகாஷ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
நெல்லை அணி 3 போட்டிகளில் 2 வெற்றி பெற்றுள்ளது . சேலம் அணி 2 போட்டிகளில் 1 வெற்றி பெற்றுள்ளது குறிபிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil