Lyca Kovai Kings batter Sai Sudharsan smashed 86 off 45 balls in the opening match of the Tamil Nadu Premier League 2023 season Tamil News
Sai Sudharsan - TNPL 2023 Tamil News: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் ஹர்திக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் அணியில் நட்சத்திர வீரராக உருவெடுத்தவர் தமிழகத்தின் இளம் வீரர் சாய் சுதர்சன். நடப்பு சீசனில் இவர் வெறும் 8 போட்டிகளில் 3 அரைசதங்கள் மற்றும் 141.4 ஸ்ட்ரைக் ரேட்களுடன் 362 ரன்கள் எடுத்தார். இருப்பினும், எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவர் எடுத்த 96 ரன்கள் டி20 லீக்கில் அவரது மறக்க முடியாத ஆட்டமாக அமைந்து போனது.
Advertisment
இந்நிலையில் சாய் சுதர்சன் நேற்று முதல் தொடங்கிய 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரிலும் தனது ஃபார்மை தொடர்வாரா? என்ற ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் திருப்பூர் அணியின் பந்துவீச்சையும் வெளுத்து வாங்கியுள்ளார் சாய் சுதர்சன். கோவையில் நடந்த இந்த ஆட்டத்தில் அவரது அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், அதிரடியாக விளையாடிய சாய் சுதர்ஷன் 4 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் 45 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார்.
சாய் சுதர்சன்
அவரது இந்த அதிரடியான ஆட்டம் கோவை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் குவிக்க உதவியது. 180 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய திருப்பூர் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், கோவை அணி திருப்பூர் அணிய 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்தது. ஆட்டத்தின் நாயகனாக சாய் சுதர்சன் அறிவிக்கப்பட்டார் என்பது குறிபிடத்தக்கது.