டி.என்.பி.எல் ஏன் முக்கியம் தெரியுமா? கோவை லைகா கிங்ஸ் ஸ்டார் வீரர்கள் ஷாருக் கான், சாய் கிஷோர் பேட்டி
டி.என்.பி.எல் போட்டிகளில் விளையாடும் போது ஐ.பி.எல் போட்டிகளுக்கு தயாராவதற்கான வாய்ப்பு கிடைப்பாதாக தமிழக கிரிக்கெட் வீரர்கள் ஷாருக்கான் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
டி.என்.பி.எல் போட்டிகளில் விளையாடும் போது ஐ.பி.எல் போட்டிகளுக்கு தயாராவதற்கான வாய்ப்பு கிடைப்பாதாக தமிழக கிரிக்கெட் வீரர்கள் ஷாருக்கான் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டி.என்.பி.எல் டி 20 கிரிக்கெட் தொடரின் 7-வது சீசன் போட்டிகள் வரும் 12-ம் தேதி தொடங்கி ஜூலை 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் பால்சி திருச்சி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் சீகம் மதுரை பேந்தர்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் களமாடுகின்றன.
இந்த தொடர் கோவை, திண்டுக்கல் சேலம் திருநெல்வேலி ஆகிய நான்கு நகரங்களில் இறுதிப்போட்டி உட்பட 32 போட்டிகள் நடைபெறுகிறது. தொடரின் குவாலிஃபையர் – 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் சேலத்திலும், குவாலிஃபையர் -2 மற்றும் இறுதிப்போட்டி திருநெல்வேலியிலும் நடைபெறவுள்ளது. பிளே ஆஃப் ஆட்டத்தில் மழை பெய்தால் ‘ரிசர்வ் டே’-வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர உணவகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழக வீரர்களான ஷாருக்கான் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் டி.என்.பி.எல் போட்டிக்கான ஜெர்ஸியை அறிமுகம் செய்தனர். இதன் பின்னர் அவர்கள் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தனர்.
Advertisment
Advertisements
அப்போது பேசிய ஷாருக்கான், 'இம்பாக்ட் பிளேயர் விதி ஆட்டத்தின் போக்கை மாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தும். இது தற்போது டி.என்.பி.எல்லில் அறிமுகம் செய்யப்படுவதால் போட்டிகள் சுவாரஸ்யமாக இருக்கும்' என்று கூறினார்.
சாய் கிஷோர் பேசுகையில், 'டி.என்.பி.எல் போட்டிகள் ஐ.பி.எல் மட்டுமின்றி பிற போட்டிகளுக்கு வீரர்களை தயார்படுத்த உதவுகிறது. இதனை வீரர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் டி.என்.பி.எல் நிர்வாகிகள், பங்களிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஷாருக்கான் லைகா கோவை கிங்ஸ் அணிக்காகவும், சாய் கிஷோர் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியாகவும் விளையாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil