7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவையில் இன்று மாலை 3:15 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
மதுரை பேட்டிங்
முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய கேப்டன் ஹரி நிஷாந்த் 4 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 64 ரன்கள் எடுத்தார். தற்போது நெல்லை அணி 127 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது.
நெல்லை பேட்டிங்
நெல்லை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக நிரஞ்சன், அருண் கார்த்திக் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி வந்த நிலையில், நிரஞ்சன் 12 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராஜகோபால் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். இதற்கிடையில் அருண் 32 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய அருண் குமார் 11 ரன்களிலும், சோனு யாதவ் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக குருசாமி களமிறங்கி 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நெல்லை அணி வெற்றி பெற்றது. நெல்லை அணி 13.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நிதிஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 4 சிக்சர்களும் 1 பவுண்டரியும் அடங்கும். மதுரை தரப்பில் சூர்யா, ராகுல், கௌதம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இரு அணியின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
நெல்லை ராயல் கிங்ஸ்
அருண் கார்த்திக் (கேப்டன்), எஸ்.ஜே. அருண் குமார், நிதிஷ் ராஜகோபால், சோனு யாதவ், ரித்திக் ஈஸ்வரன் (விக்கெட் கீப்பர்), அஜிதேஷ் குருசுவாமி, கார்த்திக் மணிகண்டன், லக்ஷய் ஜெயின் எஸ், எஸ் மோகன் பிரசாத், சந்தீப் வாரியர், எம் பொய்யாமொழி
மதுரை பாந்தர்ஸ்
எஸ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹரி நிஷாந்த் (கேப்டன்), ஜெகதீசன் கௌசிக், வாஷிங்டன் சுந்தர், ஸ்வப்னில் சிங், கே தீபன் லிங்கேஷ், முருகன் அஷ்வின், சுதன் காண்டேபன், பாலு சூர்யா, குர்ஜப்னீத் சிங், தேவ் ராகுல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil