தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8 ஆவது போட்டியில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி திண்டுக்கல் பகுதியிலுள்ள என்.பி.ஆர் மைதானத்தில் நடக்கிறது.
இந்தப் போட்டியில், டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்: TNPL News: இதை மட்டும் செய்தால் தோனி டி.என்.பி.எல் மேட்ச்-ல் களம் இறங்கலாம்; ரெய்னாவுக்கு நோ சான்ஸ்
இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விவரம்
திண்டுக்கல் டிராகன்ஸ்: ஷிவன் சிங், விமல் குமார், பாபா இந்திரஜித் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), பூபதி குமார், பி சரவணக் குமார், எஸ் அருண், எம் மதிவாணன், வருண் சக்கரவர்த்தி, சுபோத் பதி, சி சரத் குமார்.
சீகம் மதுரை பாந்தர்ஸ்: எஸ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹரி நிசாந்த் (கேப்டன்), ஜெகதீசன் கௌசிக், வாஷிங்டன் சுந்தர், ஸ்வப்னில் சிங், கே தீபன் லிங்கேஷ், எஸ் ஸ்ரீ அபிஷேக், முருகன் அஸ்வின், சுதன் காண்டீபன், தேவ் ராகுல், குர்ஜாப்னீத் சிங்
மதுரை பேட்டிங்
மதுரை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கார்த்திக் மற்றும் ஹரி நிசாந்த் களமிறங்கினர். கார்த்திக் 4 ரன்களில் அவுட் ஆக கௌசிக் களமிறங்கினார். கௌசிக் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். ஹரி மற்றும் கௌசிக் ஜோடி சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தது. இருப்பினும் ஹரி 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கிய சிறிது நேரத்திலே, கௌசிக் அவுட் ஆனார். அவர் 34 பந்துகளில் 45 ரன்கள் அடித்திருந்தார். அடுத்து வந்த ஸ்வப்னில் டக் அவுட் ஆனார். அடுத்துகளமிறங்கிய தீபன் 9 ரன்களிலும், சுதன் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகினர்.
அடுத்து வந்த முருகன் அஸ்வின் நிதானமாக ஆட மறுமுனையில் ஆடிவந்த, வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த அபிஷேக் 1 ரன்னில் அவுட் ஆனார். அடுத்ததாக தேவ் ராகுல் களமிறங்கிய நிலையில், அஸ்வின் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தாக குர்ஜாப்னீத் களமிறங்கிய சிறிது நேரத்தில் தேவ் ராகுல் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இத்துடன் மதுரை அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மதுரை அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 123 ரன்கள் எடுத்துள்ளது. திண்டுக்கல் பந்துவீச்சில் சரவணக்குமார், பதி தலா 3 விக்கெட்களையும் சக்கரவர்த்தி 2 விக்கெட்களையும், அஸ்வின் மற்றும் மதிவண்ணன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
திண்டுக்கல் பேட்டிங்
திண்டுக்கல் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சிவம் சிங் மற்றும் விமல் குமார் களமிறங்கினர். சிவம் 9 ரன்களிலும் விமல் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அருண் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக பாபா இந்திரஜித் மற்றும் ஆதித்யா கணேஷ் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடினார். இந்திரஜித் அதிரடி ஆட்டம் மூலம் ரன் குவித்தார். இருவரது விக்கெட்டையும் வீழ்த்த முடியாமல் மதுரை பந்துவீச்சாளர்கள் திணறினர். சிறப்பாக ஆடிய இந்திரஜித் அரை சதம் அடித்தார்.
இருவரும் கடைசி வரை விக்கெட் கொடுக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர். திண்டுக்கல் அணி 14.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அணி தோல்வியை தழுவியது. மதுரை தரப்பில் 3 விக்கெட்களையும் குர்ஜாப்சிங் வீழ்த்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.