TNPL Auction Tamil News: 7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டிகள் வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் வழக்கம் போல் 8 அணிகள் களமாடுகின்றன. இதுவரை இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கான வீரர்கள் ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முதல்முறையாக வீரர்கள் ஏலம் விடப்பட இருக்கிறார்கள்.
இதன்படி, ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 2 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். மற்ற வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெறுவார்கள். தக்கவைக்கப்படும் வீரர்கள் 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர். தக்கவைக்கப்படும் ‘ஏ’ பிரிவு வீரர்களின் (சர்வதேச போட்டியில் ஆடியவர்கள்) விலை ரூ.10 லட்சமாகவும், ‘பி’ பிரிவு வீரர்களின் (இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உள்ளூர் சீனியர் போட்டியில் பங்கேற்றவர்கள்) விலை ரூ.6 லட்சமாகவும், ‘சி’ பிரிவு வீரர்களின் (ஏ, பி, பிரிவில் இடம் பெறாதவர்கள், டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் 30 ஆட்டங்களுக்கு மேல் ஆடியவர்கள்) விலை ரூ. 3 லட்சமாகவும், ‘டி’ பிரிவு வீரர்களின் (மற்ற வீரர்கள்) விலை ரூ.1½ லட்சமாகவும் நிர்வாக கவுன்சில் நிர்ணயித்தது.
ஒவ்வொரு அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியல்:
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – இருப்பு ரூ.61,00,000
என்.ஜெகதீசன் – பிரிவு பி
சசிதேவ்.யு – பிரிவு சி
திண்டுக்கல் டிராகன்ஸ் – இருப்பு ரூ.60,00,000
அஸ்வின் ஆர். – பிரிவு ஏ
ஐட்ரீம் திருப்பூர் தமிழர்கள் – இருப்பு ரூ 68,50,000
துஷார் ரஹேஜா – பிரிவு டி
LYCA கோவை கிங்ஸ் – இருப்பு ரூ 62,50,000
ஷாருக் கான் .எம் – பிரிவு பி
சுரேஷ் குமார் ஜே. – பிரிவு டி
நெல்லை ராயல் கிங்ஸ் – இருப்பு ரூ.62,50,000
அஜிதேஷ் ஜி. – பிரிவு பி
கார்த்திக் மணிகண்டன் .வி.எஸ் – பிரிவு டி
ரூபி திருச்சி வாரியர்ஸ் – இருப்பு ரூ.64,00,000
ஆண்டனி தாஸ். டபிள்யூ – பிரிவு பி
சேலம் ஸ்பார்டன்ஸ் – இருப்பு ரூ 67,00,000
கணேஷ் மூர்த்தி .எம் – பிரிவு சி
மதுரை பாந்தர்ஸ் – இருப்பு ரூ 68,50,000
கௌதம் .வி – பிரிவு டி
டி.என் பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் வருகிற 23, 24 ஆகிய தேதிகளில் நடக்கிறது. ஏலத்தில் வீரர்களின் அடிப்படை விலை முறையே ரூ.3 லட்சம் (ஏ பிரிவு), ரூ.2 லட்சம் (பி), ரூ.1 லட்சம் (சி), ரூ.50 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil