tnpl champion : நேற்று நடைப்பெற்ற டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகனை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
டிஎன்பிஎல் தொடரின் 4வது சீசன் ஜூலை 19 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் ஆரம்பத்தில் இருந்தே வெற்றி முனைப்பில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இரண்டு அணிகள் திண்டுக்கள் டிராகன் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ். இதில் சேப்பாக் அணி ஏற்கனவே ஒருமுறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியில் திண்டுக்கள் அணியும், சேப்பாக் அணியும் மோதிக் கொள்வது உறுதியானதும் ரசிகர்களுக்கு பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் 3வது முறையாக சேப்பாக் சூப்பர் கில்லீசும், தொடர்ந்து 2வது முறையாக திண்டுக்கல் டிராகன்சும் களம் கண்டன.
நேற்று சென்னையில் இந்த போட்டி நடைப்பெற்றது. சொந்த மண்ணில் 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல சேப்பாக் அணி வீரர்கள் தொடர்ந்து முனைப்பு காட்டி வந்தனர். அதே போல் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி சேப்பாக் அணியை வீழ்த்தி மகுடம் சூட தொடர் பயிற்சியில் ஈடுப்பட்டிருந்தனர்.
மேலும் படிக்க.. தமிழக கிரிக்கெட் வீரராக தடம் பதித்த வி.பி சந்திரசேகர் திடீர் தற்கொலை!
இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் தடுமாறிய இந்த அணி கேப்டன் கவுசிக் காந்தியும், விக்கெட் கீப்பர சுஷிலாலும் பலம் கண்டது. ட்ட நேர முடிவில் சூப்பர் கில்லிஸ் 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்தது.வெற்றிப் பெற 127 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் டிராகன்ஸ் விளையாட தொடங்கியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் சேப்பாக் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. சேப்பாக் சூப்பர் கீல்லீஸ் அணி தரப்பில் அதிக பட்சமாக பெரியசாமி 5 விக்கெட்டும், அலெக்சாண்டர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.