TNPL Lyca Kovai Kings vs Dindigul Dragons final: இந்த டி.என்.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
தமிழ்நாடு பிரீமியர் லீக் என்கிற டி.என்.பி.எல் கிரிக்கெட்டின் 8-வது தொடர் கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி.என்.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த டி.என்.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) இரவு 7.15 மணிக்கு நடைபெறுகிறது.
டி.என்.பி.எல் தொடரில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் கோவை அணியும், கோப்பையை தட்டிப் பறிக்க வேண்டும் என்று திண்டுக்கல் டிராகன் அணியும் உள்ளன. அதனால், டி.என்.பி.எல் 8வது தொடரின் கோப்பையை வெல்லப்போவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
டி.என்.பி.எல் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற திண்ட்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, லைகா கோவை கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சுஜய் மற்றும் சுரேஷ் குமார் பேட்டிங் செய்ய களமிறங்கினர்.
லைகா கோவை கிங்ஸ் அணி 2.2 ஓவர்களில் 19 ரன் எடுத்திருந்த போது, சுரேஷ் குமார் 9 பந்துகளில் 11 ரன்கள் அடித்திருந்த நிலையில், சந்தீப் வாரியர் பந்தில் சரத் குமாரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து சாய் சுதர்ஷன் பேட்டிங் செய்ய வந்தார்.
லைகா கோவை கிங்ஸ் அணி 5.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 49 ரன் எடுத்திருந்த போது, 12 பந்துகளில் 22 ரன்கள் அடித்திருந்த சுஜய் வருண் சக்ரவர்த்தி பந்தில் விக்கெட் கீப்பர் இந்திரஜித்தால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யு. முகிலேஷ் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து ராம் அரவிந்தன் பேட்டிங் செய்ய வந்தார்.
லைகா கோவை கிங்ஸ் அணி 6.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 51 ரன் எடுத்திருந்த போது, 14 பந்துகளில் 14 ரன்கள் அடித்திருந்த சாய் சுதர்ஷன் விக்னேஷ் புதூர் பந்தில் சரத் குமார் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, வந்த அதீக் உர் ரஹ்மான் அதிரடியாக பேட்டிங் செய்தார்.
லைகா கோவை கிங்ஸ் அணி 10.6 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 87 ரன் எடுத்திருந்த போது, 17 பந்துகளில் 25 ரன் அடித்திருந்த அதீக் உர் ரஹ்மான், சுபோத் பாட்டீ பந்தில் சரத் குமாரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, கேப்டன் ஷாருக்கான் பேட்டிங் செய்ய வந்தார்.
ஷாருக்கான் 3 ரன் மட்டுமே எடுத்து விக்னேஷ் புதூர் பந்தில் சரத்குமாரிடம் கேச் கொடுத்து நடையைக் கட்டினார். எம். முஹமது பேட்டிங் செய்ய வந்தார்.
லைகா கோவை கிங்ஸ் அணி 15.6 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்திருந்த போது, 26 பந்துகளில் 27 ரன் அடித்திருந்த ராம் அரவிந்தன், சந்தீப் வாரியர் பந்தில் விமல் குமாரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இறுதியில், 20 ஓவர்கள் முடியில் லைகா கோவை கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், 130 ரன்கள் திண்டுக்கள் டிராகன் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விமல் குமார், ஷிவம் சிங் பேட்டிங் செய்ய களமிறங்கினர். ஷிவம் சிங் 4 ரன் மட்டுமே எடுத்து, சித்தார்த் பந்தில் ஷாருக்கான் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் செய்ய வந்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர், விமல் குமார் 9 ரன் எடுத்திருந்த நிலையில், கௌதம் தாமரைக் கண்ணன் பந்தில் சுரேஷ் குமாரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த பாபா இந்திரஜித், அஸ்வின் உடன் ஜோடி சேர்ந்தார்.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 2 விக்கெட் விழுந்து ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தாலும், ரவிச்சந்திரன் அஸ்வின் - பாபா இந்திரஜித் ஜோடி அதிரடியாகவும் அதே நேரத்தில் நிலைத்து நின்றும் விளையாடியது.
பாபா இந்திரஜித் 35 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷாருக்கான் பந்தில் முகிலேஷ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, சரத்குமார் பேட்டிங் செய்ய வந்தார். மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின், அரை சதம் அடித்தார்.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 46 பந்துகளில் 52 ரன்கள் அடித்திருந்த அஸ்வின் வள்ளியப்பன் யுதீஸ்வரன் பந்தில் சாய் சுதர்ஷன் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, பூபதி வைஷ்ணவ் பேட்டிங் செய்ய வந்தார்.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம், ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதல்முறையாக டி.என்.பி.எல் தொடர் கோப்பையை வென்றது. தொடர்ந்து, மூன்றாவது முறை டி.என்.பி.எல் சாம்பியன் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைபில் இருந்த கோவை கிங்ஸ் அணியின் ஹாட்ரிக் சாம்பியன் கனவு தகர்ந்தது.
லைகா கோவை கிங்ஸ் அணி வீரர்கள்:
எஸ் சுஜய், ஜெயராமன் சுரேஷ் குமார்(விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், ஷாருக்கான் (கேப்டன்), யு. முகிலேஷ், ஜி.வி. விக்னேஷ், எம். முகமது, ஜாதவேத் சுப்ரமணியன், மணிமாறன் சித்தார்த், வள்ளியப்பன் யுதீஸ்வரன், கௌதம் தாமரை கண்ணன், ஆர். திவாகர், அதீக் உர் ரஹ்மான், பி. ஹேம்சரண் , கே.எம். ஓம் பிரகாஷ், ராம் அரவிந்த், பி. வித்யூத், பாலசுப்ரமணியம் சச்சின், எம். ரஹில் ரெஹ்மான், மனிஷ் ஜி.ஆர்
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீரர்கள்:
விமல் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின்(கேப்டன்), சிவம் சிங், பாபா இந்திரஜித் (விக்கெட் கீப்பர்), பூபதி குமார், எஸ் தினேஷ் ராஜ், வருண் சக்ரவர்த்தி, சுபோத் பதி, விபி திரன், பி விக்னேஷ், சந்தீப் வாரியர், ஆதித்யா கணேஷ், ரோஹன் ராஜு, அஃபான் காதர், ஜி. கிஷூர், ராக்கி பாஸ்கர், சி சரத் குமார், கே. ஓம் நிதின், கே ஆஷிக்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.