7வது டி.என்.பி.எல் , 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் நாளை தொடங்குகிறது.
7வது டி.என்.பி.எல், 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை கோவையில் தொடங்கிறது. நாளை தொடங்கும் போட்டி ஜூலை 12 வரை திண்டுக்கல், சேலம், நெல்லை உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது.
இதில் நடப்பு சாம்பியனான சேபாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், முன்னாள் சாம்பியனான மதுரை பாந்தர்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருப்புர், உள்ளிட்ட 8 அணிகள் பங்கேகின்றனர்.
எல்லா அணிகளும் தலா ஒரு முறை மற்ற அணிகளுடன் மோதும். புள்ளிபட்டியலில் உள்ள முதல் 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். ஜூலை 5 தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவைகிறது. லீக் சுற்றில் கோவையில் 6 ஆட்டங்களும், திண்டுகல்லில் 7 ஆட்டங்களும், சேலத்தில் 8 ஆட்டங்களும், நெல்லையில் 7 ஆட்டங்களும் நடைபெறுகிறது. பிளே ஆப் சுற்று போட்டிகள் ஜூலை 7ம் தேதி தொடங்கிறது. 2வது தகுதி சுற்று 10ம் தேதியும், இறுதிப் போட்டி 12ம் தேதி நெல்லையில் நடைபெறுகிறது.
இந்த தொடரில்தான் முதல் முறையில் போட்டியில் வீரர்கள் ஏலம் முறை தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐ.பி.எல்-யை போல இதிலும் விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுரி மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“