பாதை மாறுமா; சோகம் தீருமா?

CSK vs SRH: 7 ஆட்டங்களில் 2 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் சி.எஸ்.கே. பரிதவிக்கிறது.

CSK Vs RR, Chennai Super Kings Vs Rajasthan Royals

Today ipl match score, CSK vs SRH: ஐபிஎல் கிரிக்கெட் இன்றைய ஆட்டத்தில் சி.எஸ்.கே., சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே 5 தோல்விகளை கைவசம் வைத்திருக்கும் சி.எஸ்.கே.வுக்கு அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைக்க இன்றைய வெற்றி அவசியம்.

ஐபிஎல் 2020, துபாயில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடந்து வருகிறது. இதன் 29-வது ஆட்டத்தில் இன்று (13-ம் தேதி) சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.), சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

3 முறை சாம்பியன், கடந்த முறை 2-வது இடம் என கெத்தாக களத்திற்கு வந்த சி.எஸ்.கே., முதல் ஆட்டத்தில் கடந்த முறை சாம்பியன் அணியான மும்பையை வீழ்த்தியது. அதன்பிறகு நடைபெற்ற 6 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்றது. மொத்தத்தில் 7 ஆட்டங்களில் 2 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் சி.எஸ்.கே. பரிதவிக்கிறது.

வாட்சன், டு பிளசிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். ராயுடுவும் ஓ.கே. ரகம்! மிடில் ஆர்டர் பேட்டிங்தான் படு சொதப்பலாக இருக்கிறது. ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த கேதர் ஜாதவுக்கு பதிலாக கடந்த ஆட்டத்தில் களம் இறங்கிய தமிழக வீரர் ஜெகதீசன் 28 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து ராயுடுவுக்கு ‘பார்ட்னர்ஷிப்’ கொடுத்தார். எனவே இன்றைய ஆட்டத்திலும் அவர் இடம் பெறுவது உறுதி.

டோனி, ஜடேஜா, பிராவோ ஆகியோர் மிடில் ஆர்டரில் கை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி இருக்கிறது. சேஸிங்கில் நல்ல சாதனை வைத்திருக்கும் சி.எஸ்.கே இந்த சீசனில் சேஸிங்கில் அநியாயத்திற்கு திணறுவது ரசிகர்களை கடுப்பேற்றியிருக்கிறது. அதை இன்றைய ஆட்டத்தில் வீரர்கள் சரி செய்வார்களா? என பார்க்கலாம்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் வார்னர், மனிஷ் பாண்டே, ரஷித் கான், கனே வில்லியம்சன், ஜானி பேர்ஸ்டோ, பிரியம் கார்க் உள்ளிட்ட சிறந்த வீரர்களைக் கொண்டிருக்கிறது. எனவே கடும் போட்டியை எதிர்பார்க்கலாம். இரவு 7 மணிக்கு டாஸ் போடப்படும். 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Today ipl match score csk vs srh chennai super kings

Next Story
பெங்களூர் அணியிடம் சரணடைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்… பரபரப்பான ஆட்டம்!royal challengers bangalore vs kolkata knight riders rcb vs kkr
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com