sports news, cricket news, latest cricket updates, விளையாட்டு செய்திகள், கிரிக்கெட் செய்திகள்,
விளையாட்டு உலகின் இன்றைய முக்கிய அப்டேட்டுகள் உங்கள் டைம்லைனில் இங்கே,
Advertisment
1.ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த, 11 வீரர்களை கொண்ட அல்டிமேட் டெஸ்ட் XI அணி செய்யப்பட்டு வருகிறது. இந்த அணியில் இடம் பிடிக்க முரளிதரன், ஹர்பஜன், கும்ப்ளே ஆகிய மூன்று ஸ்பின்னர்களில் ஒருவரை மட்டுமே தேர்வு செய்யவேண்டுமெனில், உங்கள் ஆப்ஷன் யார் என்று ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
இவிங்க கேட்குற கேள்வி பூராவே வில்லங்கமாவே இருக்கு!
Advertisment
Advertisements
2. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் (ஜூன்.19), ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து 481 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது.
காட்டடி, பேயடி கேள்விப்பட்டிருப்ப.... நாக்கு தள்ளடி கேள்விப்பட்டிருக்கியா!!? இது தான் அது!
3. முன்னாள் ஜிம்பாப்வே கிரிக்கெட் எம்பங்வா-உடனான வீடியோ சாட்டில், முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஜேபி டுமினி கலந்து கொண்டார். அப்போது, உங்களுக்கு பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்? என்ற கேள்விக்கு, சற்றும் தயங்காமல், கொஞ்சமும் யோசிக்காமல் அவர் சொன்ன பதில்,
ரோஹித் ஷர்மா....
ஹிட்மேன் எப்போதுமே மாஸ் தான்!
4. களிமண் தரையில் நடைபெறும் ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி செப்டம்பர் 27-ந்தேதி முதல் அக்டோபர் 11-ந்தேதி வரை பாரீஸ் நகரில் நடக்கிறது. ‘இந்த போட்டி அடைக்கப்பட்ட அரங்குக்குள் நடக்காது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரசிகர்கள் நிச்சயம் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் எவ்வளவு பேர் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை’ என்று பிரான்ஸ் டென்னிஸ் சம்மேளன தலைவர் பெர்னர்ட் குடிசெலி தெரிவித்தார்.
அப்படி இப்படி-னு ரசிகர்களை உள்ள விட்டா சந்தோசம் தான்!
5. இத்தாலி கோப்பைக்கான கால்பந்து இறுதி போட்டி ரோமில் உள்ள ஒலிம்ப்கோ மைதானத்தில் ரசிகர்கள் இன்றி நடைபெற்றது. இதில் முன்னணி அணிகளாக யுவென்டஸ் - நபோலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி சூட் கடைபிடிக்கப்பட்டது. இதில் நபோலி 4-2 என யுவனெடஸ் அணியை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
அடி போலி!!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“