விளையாட்டு உலகின் இன்றைய முக்கிய அப்டேட்டுகள் உங்கள் டைம்லைனில் இங்கே,
Advertisment
1.ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த, 11 வீரர்களை கொண்ட அல்டிமேட் டெஸ்ட் XI அணி செய்யப்பட்டு வருகிறது. இந்த அணியில் இடம் பிடிக்க, அல்லது டிராவிட்டில் ஒருவரை மட்டுமே தேர்வு செய்யவேண்டுமெனில், உங்கள் ஆப்ஷன் யார் என்று ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது என்ன, இந்திய ரசிகர்களுக்கு வந்த சோதனை!!
Advertisment
Advertisements
2. கடந்த 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், 17 சிக்ஸர்கள் பறக்கவிட்டு, சிக்ஸர்களால் மட்டுமே சதமடித்தார் இங்கிலாந்தின் இயன் மார்கன். கடந்த ஆண்டு இதே நாள், (ஜூன்.18) ரணகளம் அரங்கேற்றப்பட்டது.
தாறுமாறு தக்காளி சோறு!
3.18 கிளப் அணிகள் பங்கேற்றுள்ள பன்டெஸ்லிகா கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான பேயர்ன் முனிச் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெர்டர் அணியை தோற்கடித்தது. ராபர்ட் லெவான்டவ்ஸ்கி 43-வது நிமிடத்தில் வெற்றிக்குரிய கோலை அடித்தார்.
இதுவரை 32 ஆட்டங்களில் விளையாடி உள்ள பேயர்ன் முனிச் 24 வெற்றி, 4 டிரா, 4 தோல்வி என்று 76 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அத்துடன் இன்னும் 2 லீக் எஞ்சியுள்ள நிலையில் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் உறுதி செய்து விட்டது.
மனுஷனா பொறந்தா எதிராளியை மதிக்கத் தெரியணும்... இப்படி மாங்கு மாங்கு-னு மிதிக்கக் கூடாது.
4. ஸ்ரீசாந்தின் ஏழாண்டு தடைக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் கேரள மாநில கிரிக்கெட் சங்கம் அவரை ரஞ்சி கோப்பைக்கான கேரள அணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. ஆனால் உடற்தகுதி பெற்றால் மட்டுமே அணியில் இடம் பெறுவார்.
இதுகுறித்து ஸ்ரீசந்த் கூறுகையில் ‘‘எனக்கு வாய்ப்பு கொடுத்த கேரள மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு நான் உண்மையிலேயே நன்றிகடன் பட்டவன். என்னுடைய உடற்தகுதியை பெற்று அணிக்கு சிறந்த முறையில் திரும்புவேன். இது அனைத்து சர்ச்சைக்கும் விடைகொடுக்க வேண்டிய நேரம்’’ என்றார்.
வாங்கண்ணா, வணக்கங்கண்ணா....
5. வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்ட் அடுத்த மாதம் 8ம் தேதி தொடங்குகிறது.
இந்தத் தொடருக்கான பயிற்சியை மேற்கொள்வதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு 30 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.
1.மொயீன் அலி, 2. ஜேம்ஸ் ஆண்டர்சன், 3. ஜாஃப்ரா ஆர்சர், 4. ஜானி பேர்ஸ்டோவ், 5. டொமினிக் பெஸ், 6. ஜேம்ஸ் பிரேசி, 7. ஸ்டூவர்ட் பிராட், 8. ரோரி பேர்ன்ஸ், 9. ஜோஸ் பட்லர், 10. கிராவ்லி, 11. சாம் கர்ரன், 12. ஜோ டென்லி, 13. பென் போக்ஸ், 14. லெவிஸ் கிரேகோரி, 15. ஜென்னிங்ஸ், 16. டான் லாரன்ஸ், 17. ஜேக் லீச், 18. சாகிப் மெக்மூத், 19. கிரேக் ஓவர்ட்டன், 20. ஜேமி ஓவர்ட்டன், 21. மேத்யூ பார்க்கின்சன், 22. ஒல்லி போப், 23. ஒல்லி ராபின்சன், 24. ஜோ ரூட். 25, டாம் சிப்லி, 26. பென் ஸ்டோக்ஸ், 27. ஒல்லி ஸ்டோன், 28. அமர் விர்தி, 29. கிறிஸ் வோக்ஸ், 39. மார்க் வுட்.
வாரே வா...
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news