IPL Tamil News: நீண்ட நாள் லாக்டவுனை விறுவிறுப்பாக்கி உள்ளது ஐபிஎல். அந்த வரிசையில் இன்று டபுள் டமாக்கா. ஆம், இன்று இரண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன. மும்பை, ஹைதராபாத், சென்னை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் இன்றைய பொழுதை ஆக்கிரமிக்கவுள்ளன.
பொதுமக்கள் யாருமில்லாமல் கிரிக்கெட் போட்டி என்பது, வீரர்களுக்கான ஒருவித சவால்தான். எதிர் அணியுடனான போட்டி மட்டுமல்லாமல், பல மனப்போராட்டங்களையும் கடந்து கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் களத்தில் உள்ளனர். இன்று மாலை 3.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறவுள்ள போட்டியில் ரோஹிட் ஷர்மாவின் மும்பை அணியும் வார்னரின் ஹைதராபாத் அமையும் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகளும் ஏற்கெனவே 14 முறை நேரெதிர் விளையாடியிருக்கின்றனர். அதில், 7 போட்டிகளில் மும்பை அணியும் 7 போட்டிகளில் ஹைதராபாத் அணியும் வெற்றிபெற்று சம அளவில் இருக்கின்றனர்.
இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறவுள்ள மற்றொரு போட்டியில் தோனியின் சென்னை அணியும் ராகுலின் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகளும் ஏற்கெனவே 21 மேட்சுகள் ஒன்றாக விளையாடியுள்ளனர். அவற்றில் 12 போட்டிகளில் சென்னை அணியும் 9 போட்டிகளில் பஞ்சாப் அணியும் வெற்றிபெற்றுள்ளனர். கடந்த சில போட்டிகளில் சற்று மோசமான விளையாட்டையே சென்னை அணி விளையாடியிருக்கிறது. இன்றைய போட்டி சுவாரசியமாக இருக்குமா, வெற்றி வாகை சூடுவார்களா உள்ளிட்ட எதிர்பார்ப்பில் சென்னை ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:Todays ipl match between chennai punjab tamil news
திமுக அணி விறுவிறு கூட்டணி ஒப்பந்தம்: அதிமுக அணியில் நீடிக்கும் இழுபறி
தமிழகத்தில் மதுவிலக்கு இனி கனவுதானா? வாக்குறுதி தரக்கூட முன்வராத கட்சிகள்
அமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதி ஒதுக்கீடு – டிடிவி தினகரன் அறிவிப்பு
36 வயது… விவாகரத்து… ஆனாலும் மகிழ்ச்சி: திவ்யதர்ஷினி ‘டைமிங்’ வீடியோ
குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ 1000 நிதி : யார் திட்டத்தை யார் காப்பி அடித்தது?