41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தை முத்தமிட்ட இந்திய ஹாக்கி அணி; பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்து!

India beats Germany to win Olympic hockey medal after 41 years Tamil News: ஒலிம்பிக் போட்டியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தை கைப்பற்றி உள்ள இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு விளையாட்டு ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tokyo Olympic 2021 Tamil News: India beats Germany to win Olympic hockey medal after 41 years

Tokyo Olympic hockey 2021 Tamil News: 32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றது. இதன் ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் வெளியேறிய இந்திய அணி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இன்று காலை களமிறங்கியது. இந்த போட்டியில் ஜெர்மனி அணியை எதிர்கொண்ட இந்திய அணி, போட்டியின் 2வது காலிறுதியில் 1-3 என்ற கோல் கணக்கில் பின் தங்கி இருந்தது. இந்திய வீரர்கள் ஹர்திக் சிங் மற்றும் ஹர்மன்பிரீத் சிங் ஆகியோரின் உதவியுடன் மீண்டெழுந்த இந்திய அணி அரைநேர இடைவெளிக்கு முன்னதாக 2 கோல்களை அடித்து 3-3 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது.

தொடர்ந்து அடுத்த காலிறுதியில் களமிறங்கிய இந்திய அணியின் ரூபிந்தர் பால் சிங் மற்றும் சிம்ரஞ்சீத் சிங் ஆகியோரின் இரு விரைவான கோல்களால் 5-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. பின்னர் ஆட்ட நேர முடிவில் 5-3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்திய இந்திய ஆடவர் அணி வெண்கல பதக்கத்தை வென்று சாதனை படைத்தது.

41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை கைப்பற்றி உள்ள இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு இந்திய நாட்டு மக்கள், விளையாட்டு ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, இளைஞர்களின் கனவு நனவானது என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “வரலாறு! ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும் நாள்; வெண்கல பதக்கம் வென்ற எங்கள் ஆண்கள் அணிக்கு வாழ்த்துக்கள். இந்த சாதனையின் மூலம், ஒட்டுமொத்த தேசத்தின், குறிப்பாக நமது இளைஞர்களின் கற்பனையை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். எங்கள் ஹாக்கி அணியை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “41 வருட காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், “ஆண்கள் ஹாக்கியில் 12வது பதக்கம் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். 41 வருட காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. டோக்கியோவில் இந்த வெற்றியுடன் இந்திய ஹாக்கி அணி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாத்தை தொடங்கியுள்ளது என நான் நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கம் மூலம் வெளிப்படுத்தியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள்! இது ஒரு பெரிய தருணம்- உங்கள் சாதனைக்காக நமது நாடு பெருமை கொள்கிறது. இது உங்களுக்கான வெற்றி!” என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான பிரியங்கா காந்தி வதேரா, “என்ன ஒரு அற்புதமான விளையாட்டு! இந்திய அணிக்கு மற்றொரு பதக்கம். நமது ஆண்கள் ஹாக்கி அணியை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். மிகச் சிறப்பான வெற்றி!” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் உத்வேகமூட்டும் வெற்றிக்கு வாழ்த்துக்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அணில் கும்ளே ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்து மழை பொழிந்துள்ள மற்ற இந்திய பிரபலங்கள் பின்வருமாறு;-

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் வெண்கல பதக்கத்தை தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tokyo olympic 2021 tamil news india beats germany to win olympic hockey medal after 41 years

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com