Advertisment

ஒலிம்பிக் வரலாற்றில் முத்திரை பதித்த இந்திய ஹாக்கி அணி; பதக்கத்தை முத்தமிட்ட வீரர்களின் பின்னணி இது தான்!

Bronze medal winning Indian men's hockey team Tamil News: இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் 41 வருட நீண்ட காத்திருப்பை முடிவுக்கு கொண்டுவந்து, இந்திய ஹாக்கி வரலாற்றில் முத்திரை பதித்துள்ள இந்த வீரர்களின் பின்னணி என்ன என்பதை ஒருவர் பின் ஒருவராக இங்கு பார்க்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tokyo Olympic hockey Tamil News: Indian men's hockey team who brought medal And honour

Tokyo Olympic hockey Tamil News: 32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றது. இதன் ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் வெளியேறிய இந்திய அணி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் நேற்று காலை களமிறங்கியது. இந்த போட்டியில் ஜெர்மனி அணியை எதிர்கொண்ட இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை வென்று சாதனை படைத்தது.

Advertisment

இந்த வெற்றியின் மூலம் 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது இந்திய ஆடவர் ஹாக்கி அணி. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். மேலும், அனைத்து துறையைச் சேர்ந்தவர்களும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

publive-image

இந்நிலையில், இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் 41 வருட நீண்ட காத்திருப்பை முடிவுக்கு கொண்டுவந்து, இந்திய ஹாக்கி வரலாற்றில் முத்திரை பதித்துள்ள இந்த வீரர்கள் யார் என்பதை ஒருவர் பின் ஒருவராக பார்ப்போமா!

  1. ரூபிந்தர் பால் சிங் (30, டிபெண்டர்) - ஃபரித்கோட், பஞ்சாப்

இந்திய ஆடவர் ஹாக்கி அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெறுவதில் பெரும் பங்காற்றியவர்களில் ரூபிந்தர் பால் சிங்கும் ஒருவர். அணியின் டிபெண்டராக வலம் வரும் ரூபிந்தர் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவரது மூத்த சகோதரர், ஒரு காலத்தில் வளர்ந்து வரும் மாநில அளவிலான வீரர்களில் ஒருவராக இருந்தார். குடும்பத்தில் நிதி நெருக்கடி ஏற்படவே தனது ஹாக்கி வாழ்க்கையையும் கல்வியையும் விட்டுக்கொடுத்தார். மற்றும் ரூபிந்தரின் விளையாட்டு வாழ்க்கை எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்பதையும் உறுதி செய்தார்.

publive-image

ஒலிம்பிக் பதக்கம் வென்ற முன்னாள் இந்திய வீரர் ககன் அஜித் சிங்கின் உறவினரான ரூபீந்தர் பால் சிங் எந்த கூட்டத்தில் அவர் நின்றாலும் நம்மால் எளிதில் அடையாளம் காண முடியும். ஏன்னென்றால் 6 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட வீரராக இவர் இருக்கிறார். இவரை அணியினர் செல்லமாக 'பாப்' அல்லது 'பாபி' என அழைப்பார்களாம்.

அசத்தலாக ட்ராக் - பிளிக் ஷாட் ஆடக்கூடிய ரூபீந்தர் டோக்கியோவில் நான்கு கோல்கள் அடித்துள்ளார். தவிர, ஜெர்மனி அணிக்கெதிரான ஆட்டத்தில் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகை செய்திருந்தார்.

  1. சுரேந்தர் குமார் (27, டிபெண்டர்) - கர்னல், ஹரியானா

இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் மிகக் குறுகிய காலத்தில் அமைதியான மற்றும் மிகவும் தன்னம்பிக்கை கொண்ட டிபெண்டராக மாறியவர் தான் சுரேந்தர் குமார். ஹரியானாவின் கர்னல் மாவட்டத்தைச் சேர்ந்த இவரின் பிறந்த ஊர் குருக்ஷேத்ரா ஆகும். குருக்ஷேத்ரா என்ற என்றால் நமக்கு நினைவுக்கு வருவது மஹாபாரதம் தான். (குருக்ஷேத்ரா மத முக்கியத்துவம் வாய்ந்த இடம் மற்றும் நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்றாகும்.)

publive-image

நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்றாக உள்ள குருக்ஷேத்ராவில் இருந்து இந்திய ஹாக்கி அணியில் இடம் பிடித்த சுரேந்தர் குமார், அவரது வீட்டிற்கு அருகிலுள்ள கூழாங்கல் நிறைந்த மைதானத்தில் விளையாடத் தொடங்கியவர். சிறந்த சமாளிக்கும் திறன்களைக் கொண்டுள்ள இவர் அவரது சொந்த ஊரில் கொண்டாப்பட்டு வருகிறார். மேலும் அங்குள்ள டஜன் கணக்கான இளம் குழந்தைகள் அவரது பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சி அணிந்து விளையாடுகிறார்கள். பதக்கதோடு நாடும் திரும்பும் இவருக்கு அவரது ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

  1. மன்பிரீத் சிங் (29, மிட்பீல்டர்) - மிதாபூர், பஞ்சாப்

இந்திய ஆடவர் ஹாக்கி அணியை வழிநடத்தி வரும் மன்பிரீத் சிங் அணியில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரராக உள்ளார். இவர் சிறுவயதாக இருந்த போது இவரது மூத்த சகோதரர்கள் ஹாக்கி விளையாடி அதிக பரிசுகளை வென்று வருவார்களாம். அதைப் பார்த்து தானும் ஹாக்கி விளையாட வேண்டும் என ஆர்வம் கொண்டுள்ளார்.

publive-image

இவர், ஹாக்கி விளையாட கூடாது என அவரது தயார் மற்றும் மூத்த சகோதரர்கள் கண்டிப்புடன் தெரிவித்து உள்ளனர். ஆனால் அதையெல்லாம் சிறிதும் கேட்காத மன்பிரீத் தனது ஹாக்கி பயிற்சியை தொடர்ந்துள்ளார். அவரை அறையில் பூட்டி வைத்தும் கூட அவர் கேட்டகவில்லையாம். அறையின் சன்னலை உடைத்து எஸ்கேப் ஆகி ஹாக்கி கற்று விளையாடியிருக்கிறார்.

உள்ளூர் ஆட்டங்களில் பந்தை கோல் நோக்கி பறக்க விட்ட மன்பிரீத் சிங் ரூ.500 -யை முதன் முதலில் ரொக்க பரிசாக பெற்றுள்ளார். தொடர்ந்து பல பரிசுகளை அள்ளி குவித்த அவருக்கு பஞ்சாப் மாநில அரசு ரூபாய். 1 கோடி பரிசளித்து கவுரவிக்க உள்ளது.

  1. குர்ஜந்த் சிங் (26, பார்வடு ஆடுபவர்) - அமிர்தசரஸ், பஞ்சாப்

ஹாக்கியில் பார்வடு ஆடுபவர் என்றால் கோல் அடிக்க உதவுவது மற்றும் முக்கியமான தருணங்களில் கோல் அடித்து அசத்து ஆகும். இந்திய ஹாக்கி அணியில் பார்வடு ஆடுபவராக களம் கண்ட குர்ஜந்த் சிங், ஜனவரி 2020ம் ஆண்டு நடந்த (FIH) ப்ரோ லீக்கில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி கோல் அடித்த 13 விநாடிகளுக்குப் பிறகு அதிவேக கோலை அடித்து அசத்தி இருந்தார். இந்த ஆட்டத்தை 5-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது.

publive-image

தனது மூத்த சகோதரரைப் பார்த்து ஹாக்கி விளையாட வந்த குர்ஜந்த் சிங் இந்திய அணியின் அசாத்தியமான வீரர்களில் ஒருவராக வலம் வருகிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தின் அரைநேர முடிவில் அவரது உறவினர் சிம்ரன்ஜீத்துடன் சேர்ந்து 3வது கோல் அடித்து 3- 3 என சமன் செய்தார்.

குர்ஜந்த் சிங் தனது இந்த அசாதாரண ஆட்டத்தை அப்போதே வெளிப்படுத்தி இருந்தார் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த ஜூனியர் உலகக் கோப்பையில் போட்டியில் 2வது கோலை அடித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தார். டோமாஹாக் (ரிவர்ஸ் ஸ்டிக்) டிரைவ் ஆடும் இவருக்கு "மிஸ்டர் பேக்ஹாண்ட்" என்ற புனைப்பெயரை ஜெர்மன் வீரரான ஃப்ளோரியன் ஃபுச் கொடுத்துள்ளார்.

  1. ஹர்மன்பிரீத் சிங் (25, டிபெண்டர்) - ஜந்தியாலா குரு, பஞ்சாப்

ட்ராக் - பிளிக் ஷாட்டில் நிபுணத்துவம் பெற்றவர் ஹர்மன்பிரீத் சிங் என்றால் நிச்சயம் மிகையாகாது. எதிரே எத்தனை வீரர்கள் இருந்தாலும் தோள்பட்டையை வளைத்து பந்தை லாவகமாக கோல் போடும் வித்தை உடையவர் ஹர்மன்பிரீத் சிங்.

publive-image

டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் 6 கோல்களை அடித்து அசதியுள்ள ஹர்மன்பிரீத் சிங், தான் சிறுவயதாக இருந்தபோது தனது தந்தையின் டிராக்டரில் பதுங்கிப் பதுங்கி பயிற்சி மேற்கொள்வாராம். பின்நாட்களில் சுர்ஜித் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு தன்னை பட்டை தீட்டிக் கொண்டுள்ளார். இவர் கோல் அடிப்பதில் கில்லாடி மட்டுமல்ல, பந்தை துல்லியமாக பாஸ் செய்து எதிரணியின் தாக்குதலை முறியடிக்கும் திறனையும் உடையவர் ஆவார்.

  1. பிஆர் ஸ்ரீஜேஷ் (33, கோல்கீப்பர்) - கிழக்கம்பலம், கேரளா

கொச்சியில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்தவர் தான் 'ஹாக்கி தூண்' பிஆர் ஸ்ரீஜேஷ். விவசாயியின் மகனாக பிறந்து வளர்ந்த ஸ்ரீஜேஷ் எல்லா விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவராக இருந்தவர். ஆனால் திருவனந்தபுரத்தின் ஜி.வி.ராஜா பள்ளிக்கு அவர் படிக்க சென்றபோது அவரது வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்பட்டது. அவரிடம் இருந்த ஸ்பார்க்கை கண்ட பயிற்சியாளர் அவரை தனது ஹாக்கியில் இணைத்துக் கொண்டார்.

PR Sreejesh

2004ம் ஆண்டு நடந்த ஜூனியர் ஆசிய கோப்பைக்கான முகாமில் கலந்து கொள்ள சென்ற இவரிடம் சரியான கோல்கீப்பர் கிட் கூட இல்லை. இதனால் அவர் அணியில் இடம்பிடிக்கவில்லை. பின்னர் மலேசியாவில் நடந்த நான்கு நாடுகளுக்கு இடையேயான போட்டியில் தேர்வு செய்யப்பட்டார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் தனது பணியை சீரும்சிறப்புமாக ஆற்றிய இவர், ஜெர்மனி அணி கடைசி 6 வினாடிக்கு முன்னதாக அடிக்க முயன்ற கோலை தடுத்து இந்திய ஹாக்கி அணியின் அரணாக செயல்பட்டார்.

publive-image

எதிரணிக்கு சாவல் விடும் பணியை செய்து வரும் ஸ்ரீஜேஷ் ஒரு தீவிர புத்தகம் வாசிப்பாளர். அவர் எங்கு பயணம் செய்தாலும் அவரது கிட்பேக்கில் ஒரு புத்தகம் கண்டிப்பாக இருக்கும்.

  1. அமித் ரோஹிதாஸ் (28, டிபெண்டர்) - சுந்தர்கர், ஒடிசா

நடிகர் வடிவேலு ஒரு காமெடியில், 'தம்பி நாங்க அடி வாங்காத ஏரியாவே கிடையாது' என்று கூறுவது போல் அமித் ரோஹிதாஸ் உடலில் காயம் படாத இடமே இல்லை. பெனால்டி கார்னர் ஷாட்களை தடுக்க விரையும் அவருக்கு ஒரு ஆட்டத்தில் 20 முதல் 25 இடத்தில் அடி விழும்.

publive-image

அணியின் வெற்றிக்கு அயராது உழைக்கும் அமித் ரோஹிதாஸ், மிகவும் ஏழ்மையான விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். குடும்ப சூழ்நிலையால் அவரது தங்கையின் கல்வி பாதியிலே நிறுத்தப்பட்டது. இப்படி ஒரு கடிமான காலத்தை பல வலிகளோடு மெதுவாக கடந்த அமித்துக்கு 2013ம் ஆண்டில் அதிஷ்டம் அடித்தது. சிறந்த டிபெண்டரான இவரை இந்திய ஹாக்கி லீக்கில் ராஞ்சி ரெக்னோஸ் அணி ரூ.16 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்து.

இந்த சம்பவம் அவரது வாழைக்காயின் திருப்புமுனையாக அமைந்தது. ஏலத்தில் கிடைத்த பணத்த்தை தனது தங்கையின் கல்விக்கு செலவிட்டார் அமித். தற்போது இந்திய ஹாக்கி அணியில் இடம்பிடித்துள்ள இவர் பந்தை அதிவேகமாக கடத்தும் பணியை செவ்வனே செய்து வருகிறார். மேலும், பெனால்டி கார்னர் ஷாட்கள் அடிக்கப்படும் போது அதை தடுக்க விரையும் முதல் வீராகவும் உள்ளார்.

  1. லலித் உபாத்யாய் (29, முன்னோக்கி) - வாரணாசி, உத்தர பிரதேசம்

ஒரு சாதாரண துணிக்கடை உரிமையாளரின் மகன் தான் லலித் உபாத்யாய். தனது மூத்த சகோதரர்களுடன் பிரபல கல்லூரி மைதானத்திற்கு சென்ற இவர், தனது ஹாக்கி வாழ்க்கைக்கு அங்கேயே அடித்தளமிட்டார். இவரது பந்து கடத்தும் திறன் நிபுணர்களின் கண்களைக் கவர்ந்தது. எனவே அவர்கள் இவரை அருகிலுள்ள (கரம்பூர்) உள்ள ஒரு அகாடமிக்கு பரிந்துரை செய்தனர். அங்கு ஹாக்கி-அன்பான பரோபகாரரும் அரசியல்வாதியுமான மறைந்த தேஜ் பகதூர் சிங், வயல்களுக்கு இடையே ஒரு பிட்ச் கட்டி இருந்தார். அங்குதான் லலித் உபாத்யாய் தன்னைத்தானே செதுக்கும் பணியில் ஈடுபட்டார்.

publive-image

லலித் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்படுவதற்கு முன் அவருக்கு தெரியாமல் ஒரு செய்தி சேனலால் அவரது பெயர் ஒரு ஹாக்கி அதிகாரியின் ஸ்டிங் ஆபரேஷனில் பயன்படுத்தப்பட்டது. ஏறக்குறைய 10 ஆண்டுகள் மற்றும் பல நிராகரிப்புகளுக்குப் பிறகு, லலித் இந்தியாவின் வழக்கமான (ரெகுலர்) வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவரது தந்தை இப்போதும் கூட வாரணாசியில் உள்ள சில வங்கிகளுக்கு கூரியர்களை டெலிவரி செய்து வருகிறார்.

  1. பிரேந்திர லக்ரா (31, டிபெண்டர்) - ரூர்கேலா, ஒடிசா

அணியின் துணை கேப்டன்களில் ஒருவராக உள்ளவர் பிரேந்திர லக்ரா. இவருடன் பிறந்தவர்கள் தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்காக விளையாடியுள்ளனர். இந்திய அணிக்கு விளையாடி வரும் லக்ராவின் ஹாக்கி பயணம் கரடு முரடு நிறைந்த காட்டு வழி பயணமாக தான் இருந்தது.

publive-image

காலில் ஏற்பட்ட காயத்தால் 2016ம் ஆண்டில் நடந்த ரியோ ஒலிம்பிக்கில் இவரால் கலந்து கொள்ள இயலவில்லை. யானை பலத்துடன் மீண்டு வந்த இவர் இந்தாண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக்கில் அணி பதக்கம் வெல்வதை உறுதி செய்தார். மேலும் போட்டிகளின் பெரும் பகுதிகளில் ஆகச் சிறந்த டிபெண்டராக உருவெடுத்து அணியை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.

  1. கிரிஷன் பதக் (24, கோல்கீப்பர்) - கபுர்தலா, பஞ்சாப்

கிரிஷன் பதக் ஒரு கிரேன் ஆபரேட்டரின் மகன் ஆவார். இவரது குடும்பம் நேபாள நாட்டில் இருந்து குடிபெயர்ந்து இந்தியா வந்தது. கிரிஷன் கட்டுமான தளங்களில் உள்ள குப்பைகளை நகர்த்துவதன் மூலம் அவரது தந்தைக்கு உதவி செய்தார். இவர் 12 வயது இருந்த போது துரதிர்ஷ்டவசமாக அவரது தாயை இழந்தார். 2016ம் ஆண்டு நடந்த ஜூனியர் உலகக் கோப்பையில் கிரிஷன் விளையாட ஆறு மாதங்களுக்கு இருந்த போது அவரது தந்தையை இழந்தார். சோகமான விடயம் என்னவனென்றால் இவரது பெற்றோர்கள் இருவருமே திடீர் மாரடைப்பால் இறந்தனர்.

publive-image

ஹாக்கியில் பெரியதாக ஆர்வம் இல்லாத கிரிஷன் பதக் தந்தையின் வற்புறுத்தலால் அவரது 12 வயதில் சுர்ஜித் அகாடமிக்கு சென்றார். அங்கு பட்டை தீட்டப்பட்ட இந்த வைரம் தற்போது இந்திய அணியில் ஜொலித்து வருகிறது. இந்திய ஹாக்கி அணியின் மூத்த கோல்கீப்பர் வீரர் பிஆர் ஸ்ரீஜேஷுடம் வித்தை கற்று வரும் பதக் அவரின் ஓய்வுக்கு பின் அணியின் நிலையான இடத்தை பெறுவார்.

  1. நீலகண்ட சர்மா (26, மிட்பீல்டர்) - இம்பால் கிழக்கு, மணிப்பூர்

மேரி கோம், மீராபாய் என ஒலிம்பிக் சாம்பியன்களை கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் பிறந்தவர் தான் நீலகண்ட சர்மா. 26 வயதான இவர், மணிப்பூரில் உள்ள போஸ்டீரியர் ஹாக்கி அகாடமியில் தனது பயணத்தைத் தொடங்கினார். பின்னர் தனது 16 வது வயதில் தன்னை மேம்படுத்திக்கொள்ள போபாலுக்குச் செல்ல முடிவு செய்தார்.

publive-image

மிகவும் துடிப்பான வீரர்களுள் ஒருவராக உள்ள நீலகண்ட சர்மா வளர்ந்து வரும் வீரர்களில் முக்கியமானவர். ஒலிம்பிக்கில் குறைந்த போட்டிகளில் களம் கண்டு இருந்தாலும் தன்னம்பிக்கையை தளர விடாத வீரர். அடுத்த ஒலிம்பிக்கில் விளையாடும் அணியில் நிச்சசயம் இடம்பிடிப்பார் என நம்பலாம்.

  1. சுமித் குமார் (24, பார்வடு) - சோனேபட், ஹரியானா

நிலம் இல்லாத குடும்பத்தில் பிறந்து, இரண்டு வேளை உணவுக்காக பணத்தை திரட்ட முடியாத கடின வாழ்க்கையை கடந்து வந்த வீரர் சுமித் குமார். இவரும், இவரது சகோதரரும் ஹரியானாவின் முர்தலில் உள்ள உள்ளூர் தாபாக்களில் துப்புரவுப் பணியாளர்களாகப் பணியாற்றினர். பின்னர் ஹாக்கி பயிற்சியை மேற்கொண்டனர்.

publive-image

வேலை செய்யும் போதே ஹாக்கி கனவை அமைதியாக வளர்த்துக்கொண்ட இவர் மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளில் பங்கேற்று, குருகிராமில் உள்ள விளையாட்டு விடுதியில் இடம் பிடித்தார் இறுதியில் இந்திய தேசிய அணிக்கு தேர்வானார். 'ஜேம்ஸ் பாண்ட்' என்ற செல்லப்பெயர் கொண்ட இவர், 2016ல் உலகக் கோப்பையை வென்ற ஜூனியர் அணியில் இடம் பிடித்திருந்தார்.

  1. விவேக் சாகர் பிரசாத் (21, மிட்ஃபீல்டர்) - ஹோஷங்காபாத், மத்திய பிரதேசம்

இந்திய ஹாக்கியின் ஜாம்பவானாக திகழ்ந்த தியான் சந்தின் மகன் அசோக்குமாரின் வழிகாட்டுதலில் வளர்ந்தவர் தான் விவேக் சாகர் பிரசாத். இவர் இந்திய அணியில் இடம் பிடித்த 2வது இளம் வீரர் ( 17 வயது 10 மாதங்கள்) என்ற பெருமையை உடையவர்.

publive-image

பள்ளி ஆசிரியரின் மகனான பிரசாத் நியூசிலாந்துக்கு அணிக்கு எதிராக 2018ல் விளையாடியபோது இந்தியாவிற்கு அறிமுகமானார். அவருக்கு 15 வயது இருந்தபோது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டார். பின்னர் அதில் இருந்து மீண்டு வந்த இவர் 2018ம் ஆண்டு நடந்த இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் இந்திய ஜூனியர் அணியை வழிநடத்தி வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்தார். இவர் ஒரு தீவிர செஸ் வீரர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

  1. ஷம்ஷேர் சிங் (24, பார்வடு) - அட்டாரி, பஞ்சாப்

ஷாம்ஷர் சிங் ஒரு மிட்பீல்டராகத் தொடங்கி படிப்படியாக முன்னேறி முன்னோக்கி (பார்வடு) இடத்தை நோக்கி நகர்ந்தவர். இவரின் அசாத்தியமான ஆட்டத்தை கண்ட இந்திய அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ரெய்ட் இவர் 'ஆஸ்திரேலிய வகை வீரர்' என்று புகழ்ந்தார்.

புகழ்பெற்ற சுர்ஜித் அகாடமியின் அரங்குகளில் கோல்களை பறக்க விட்ட ஷாம்ஷர் சிங் இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள அட்டாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். மிகச் சிறிய வயதிலிருந்தே ஹாக்கி உபகரணங்கள் வாங்க போராடினார். தனது விவசாயி தந்தையின் சம்பள பணத்தில் வாங்கிய ஹாக்கி பேட்டை டேப்பைப் பயன்படுத்தி சரிசெய்து இரண்டு வருடங்களுக்குப் பயன்படுத்தினார்.

publive-image

ஒலிம்பிக் ஹாக்கி அணியில் இவர் இடம் பிடிக்க 6 மூத்த வீரர்களை கடக்க வேண்டி இருந்தது. மேலும் இவரது தேர்வு அப்போது பெரிய விவாதத்தை கொண்டு வந்தது. அதோடு இவர் மீது சில விமர்சனங்களும் வைக்கப்பட்டன. ஆனால், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் அந்த விமர்சனங்களை தவிடு பொடியாக்கியனார். அவரை விமர்சித்தவர்களுக்கு பதிலடியும் கொடுத்தார்.

  1. வருண்குமார் (26, டிபெண்டர்) - மிதாபூர், பஞ்சாப்

6 ஆம் வகுப்பு படிக்கும் போதே சிறந்த ஹாக்கி வீராக மாற வேண்டும் என்ற கனவோடு பயணத்தை தொடங்கியவர் தான் வருண்குமார். தொடர் முயற்சிகளையும் பயிற்சிகளையும் மேற்கொண்ட இவர், பள்ளி நண்பரும் தேசிய அணியின் கேப்டனுமான மன்பிரீத் சிங்கின் உந்துதலால் மேம்பட்டார். மேலும் சுர்ஜித் சிங் அகாடமியில் தன்னை பட்டை தீட்டிக்கொண்டு இந்திய அணியில் இடம் பிடித்தார்.

publive-image

வருண்குமாரின் தந்தை ஒரு லாரி டிரைவர் ஆவார். ரூ .5000 மூலம் வீடு மற்றும் வருணின் தேவைகளை நிர்வகிக்க வேண்டியிருந்ததால், வருனுக்கான பாதை எளிதாக இல்லை. இந்திய ஹாக்கியின் சிறந்த வீரர்களுள் ஒருவராக இருப்பேன் என வருண் அவரது குடும்பத்தினரிடம் உறுதியளித்திருந்தார்.

  1. மன்தீப் சிங் (26, பார்வடு) - ஜலந்தர், பஞ்சாப்

2016 ஜூனியர் உலகக் கோப்பை வென்ற அணியில் இடம் பிடித்த மன்தீப் சிங் திறமையான பார்வடு வீரராகவும் நிலையான செயல்திறன் மிக்கவராகவும் உள்ளார். இவர் இந்திய அணியில் 2013ம் அறிமுகமானார். இவரால் 2016ல் நடந்த ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள இயலவில்லை.

publive-image

5 வயது இருந்த போதே ஹாக்கி மட்டையை தூக்கிய மன்தீப் சிங்கிற்கு கிரிக்கெட் மட்டையை சுழற்ற வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது. ஆனால் அவரது சகோதரர் ஹாக்கி விளையாடுவதை கவனித்த இவர் அதையே பின் தொடர்ந்தார். இவர் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற அணியில் இடம் பிடித்திருந்தார். மேலும் 2018ல் நடந்த சாம்பியன்ஸ் லீக்கில் வெள்ளி வென்ற அணியிலும் இருந்தார்.

  1. சிம்ரன்ஜீத் சிங் (24, பார்வடு) - சாஹல் கலான், பஞ்சாப்

இந்திய ஹாக்கி வீரர் குர்ஜந்த் சிங்கின் உறவினர் தான் சிம்ரன்ஜீத் சிங். இந்த ஜோடி தான் ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் 3வது கோல் அடித்து சமன் செய்தது. தற்செயலாக, இந்த ஜோடி 2016ல் லக்னோவில் நடந்த ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தது. இந்த ஜூனியர் உலகக் கோப்பை தொடர் பைனலில் பெல்ஜியத்தை 2-1 என்ற கோல் கணக்கில் வெல்ல இந்த ஜோடி உதவியது.

publive-image

குர்ஜந்த் சிங்கின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி சீனியர் அணியில் இடம்பிடித்துள்ள சிம்ரன்ஜீத் சிங் , 2018ல் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானார்.

  1. ஹர்திக் சிங் (22, பார்வடு) - குஸ்ரோபூர், பஞ்சாப்

ஹாக்கி பாரம்பரியமிக்க குடும்பத்தில் வளர்ந்தவர் தான் இளம் வீரர் ஹர்திக் சிங். அவரது தாத்தா ப்ரீதம் சிங் ரே, முன்னாள் இந்திய கடற்படை பயிற்சியாளர். தாத்தா ப்ரீதம் சிங் ரே தான் இவருக்கு ஹாக்கியை அறிமுகம் செய்துள்ளார். அவரது தந்தை வரிந்தர்பிரீத் தேசிய அணிக்காக விளையாடியவர்.

publive-image

இவரது அத்தை ராஜ்பீர் கவுர், 1982 முதல் 1994 வரை தொடர்ந்து நான்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடி தேசிய அணியின் கேப்டனாக இருந்தார். இவரது மாமா, ஜுக்ராஜ் சிங், ட்ராக் - ஃப்ளிக்கர் ஷாட் அடிப்பதில் புகழ் பெற்றவர். ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு மாமா குர்மாயில், 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அணியில் அங்கம் வகித்தவர். தற்போது இவர் அவரது குடும்பத்தில் இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் 1 கோல் அடித்திருந்த ஹர்திக் ஜெர்மனி அணிக்கு எதிராக மேலும் ஒரு கோல் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. தில்பிரீத் சிங் (21, பார்வடு) - புட்டலா, பஞ்சாப்
publive-image

7 வயதில் ஹாக்கி மட்டையை கையில் எடுத்த தில்பிரீத் சிங் இராணுவத்தில் பணியாற்றிய அவரது தந்தை பல்விந்தரின் ஈர்ப்பால் அதை வாழ்நாள் முழுவதும் தொடர்வதாக முடிவு செய்தார். சுர்ஜித் அகாடமியில் தன்னை செதிக்கிக்கொண்ட இவர், ஒரு திறமையான கோல்காரராக தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார். மேலும் 2017ல் நடந்த ஜோகூர் ஆப் சுல்தான் கோப்பையில் (21 வயதுக்குட்பட்ட) ஒன்பது கோல்களை அடித்து அனைவரது புருவங்களையும் உயர செய்தார். தனது 18 வயதிலே சீனியர் அணியில் இடம் பிடித்த இவர் டோக்கியோவில் இரண்டு கோல் அடித்தார்.

கிரஹாம் ரீட் (இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர், 57) - ஆஸ்திரேலியா

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ரீடிற்கு இந்திய அணி வென்றுள்ள பதக்கம் ஒரு சிறப்பான முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளது. 2016ம் ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளராக களம் கண்ட இவருக்கு அந்த அணி ஆறாவது இடத்தை மட்டுமே பெற்று தந்தது. எனவே, அவர் பயிற்சியளித்த அணி டோக்கியோவில் பதக்கம் வெல்வது அவருக்கு ஒரு இனிமையான அனுபவத்தையும் மகிழ்வையும் கொடுத்துள்ளது.

2019ம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்தியாவின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கிரஹாம் ரீட் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அவரது குடும்பத்தினரை சந்திக்கவில்லை. பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைத்தை தனது வீடாக மாற்றிக் கொண்டார்.

publive-image

ஒரு அணியைத் தயாரிப்பதற்கான தனித்துவமான வழிகளுக்கு பெயர் பெற்றவர் கிரஹாம் ரீட். ரியோ ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக இருந்தபோது அந்த அணி வீரர்களை மனதளவில் தயார் செய்ய 45 நிமிடங்களுக்கு ஒரு பேருந்தில் உட்கார வைத்தார். ஒலிம்பிக்கின் போது இது ஒரு அசாதாரணமான விடயம் தான்.

"கிரஹாம் ரீட் மென்மையாக பேசுபவர், நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர், சிறந்த மனித மேலாளர் மற்றும் தந்திரோபாய வலிமையானவர். அணியுடனான அவரது இரண்டு ஆண்டுகளில், அவர் அணியின் நிலைத்தன்மையுடன் பணியாற்றினார், அளவிடப்பட்ட ஆக்கிரமிப்பை ஏற்படுத்தினார் மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவு அமைதியைக் கொண்டுவந்துள்ளார். இது ஜெர்மனிக்கு எதிரான அழுத்தத்தின் கீழ் அணி பாதுகாத்த விதத்தில் தெளிவாக இருந்தது." என 'தி இந்திய எக்ஸ்பிரஸ்' நாளிதழ் அவரைப் பற்றி குறிப்பிட்டுள்ளது.

ராபின் ஆர்கெல் (வலிமை மற்றும் சீரமைப்பு பயிற்சியாளர், 33) - தென்னாப்பிரிக்கா

இந்தியாவால் தங்கள் எதிரிகளை விஞ்ச முடியும் என்றால், அதற்கு ஆர்கெல் தான் காரணம். தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் பயோகினெடிக்ஸில் எம்ஃபில் படித்தவர் தான் ராபின் ஆர்கெல். நான்கு வருடங்களுக்கும் மேலாக அந்த நட்டு ஹாக்கி அணியில் இருந்தவர். இப்போது அவர் உலகின் சிறந்த அணிகளில் ஒன்றான இந்தியாவில் இடம் பெறுவதை உறுதி செய்துள்ளார்.

publive-image

இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு தென்னாப்பிரிக்க ரக்பி அணியுடன் இணைந்து பணியாற்றிய ஆர்கெல்லின், இந்திய வீரர்கள் சராசரியாக 21 முதல் 23 வரை யோ-யோ டெஸ்ட் ஸ்கோரைப் பெற்றுவருவதை உறுதி செய்துள்ளார். இந்த டெஸ்டில் சில வீரர்கள் 23 க்கு மேல் செல்கின்றனர். ஊரடங்கின் போது, ​​அவர் அணியின் உடற்தகுதியை அதிக தீவிரம் கொண்ட பயிற்சிகளுடன் உறுதி செய்தார், மேலும் கடந்த ஆண்டு கோவிட் நேர்மறையாக இருந்த அரை டஜன் வீரர்களுடன் பணியாற்றினார்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Sports Tamil Sports Update Tokyo Olympics Olympics
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment