Advertisment

ஒலிம்பிக் மல்யுத்தம்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீரர் ரவிக்குமார்

Ravi Dahiya, Deepak Punia, Women’s Hockey team in Semifinals Tamil News:பிற்பகல் 3 மணிக்கு நடக்க உள்ள மல்யுத்தப்போட்டியின் அரையிறுதியில் இந்திய வீரர் தீபக் புனியா அமெரிக்க வீரர் டேவிட் மாரிஸ் டெய்லர் என்பவருடன் பலபரீட்ச்சை நடத்துகிறார்.

author-image
WebDesk
New Update
Tokyo Olympics 2021 Tamil News: Ravi Dahiya, Deepak Punia, Women’s Hockey team in Semifinals

Tokyo Olympics 2021 Tamil News: 32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று காலை நடந்த மல்யுத்தப்போட்டியின் 86 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதிக்கு முந்திய சுற்றில் நைஜீரிய வீரர் எகெரெகெமியை எதிர்கொண்ட இந்திய வீரர் தீபக் புனியா 12-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார்.

Advertisment
publive-image

தொடர்ந்து நடந்த கால் இறுதியில் சீன வீரர் சூஷென் லின் என்பவரை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். இந்த போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த இவர் துல்லியமான அசைவுகளால் சிறப்பான கம்பேக் கொடுத்து வெற்றி பெற்றார். மேலும் கடைசி 15 நொடிகளில் 3 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்று அசத்தினார்.

இன்று பிற்பகல் 3 மணிக்கு நடந்த அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா அமெரிக்க வீரர் டேவிட் மாரிஸ் டெய்லர் என்பவருடன் பலபரீட்ச்சை நடத்தினார். இதில் தீபக் புனியா டேவிட் மோரிஸிடம் 0-10 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியை தழுவினார். இனி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாடுவார் தீபக் புனியா.

.இந்த போட்டிக்கு முன்னதாக பிற்பகல் 2:45 மணிக்கு நடந்த மல்யுத்தம் 59 கிலோ எடை ( பிரீ ஸ்டைல்) பிரிவில் அரையிறுதியில் இந்திய வீரர் ரவிகுமார் தாஹியா உஸ்பெகிஸ்தான் வீரர் சனாயேவ்வை எதிர்கொண்டார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இவர் உஸ்பெகிஸ்தான் வீரர் சனாயேவ்வை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரவிகுமார் தாஹியா.

publive-image

இவர் கடந்த 2019, 2020 என அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றவர். இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் 57 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கும் தகுதியை அடைந்தார் என்பது குறிப்பித்தக்க ஒன்று.

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: காலிறுதியில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொண்ட இந்திய மகளிர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று வரலாற்றுச் சாதனை நிகழ்ச்சியது. ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் 41 ஆண்டுகளில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணிக்கு மக்கள் வாழ்த்து மழை பொழிந்தனர்.

publive-image

இன்று பிற்பகல் 3:30 மணிக்கு நடந்த அரையிறுதியில் அர்ஜென்டினாவை எதிர்கொண்ட இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. எனவே வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை சந்திக்கிறது இந்திய அணி.

publive-image

இன்று காலை 11 மணிக்கு நடந்த மகளிருக்கான 69 கிலோ குத்துச்சண்டை அரையிறுதியில் நம்பர் ஒன் வீராங்கனை சுர்மனேலியிடம் தோல்வியை தழுவிய இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார்.

publive-image

தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே அசத்தியுள்ள லவ்லினா மீராபாய் சானு, சிந்துவை தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3ஆவது பதக்கதை பெற்றுத் தந்துள்ளார்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Tokyo Olympics Olympics Hockey Indian Hockey
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment