Advertisment

ஒலிம்பிக் ஹாக்கி: வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி; வாழ்த்து மழை பொழியும் பிரபலங்கள்!

India into first Olympic semis in women’s hockey Tamil News: பரபரப்பான காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 1- 0 என்ற கணக்கில் சாய்த்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய மகளிர் அணியினருக்கு ரசிகர்கள் பிரபலங்கள் என அனவைரும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

author-image
WebDesk
New Update
Tokyo Olympics Tamil News: India into first Olympic semis in women’s hockey

Tokyo Olympics latest Updates in Tamil: 32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் 11வது நாளான இன்று, மகளிருக்கான ஹாக்கி காலிறுதி போட்டி நடந்தது. இந்த போட்டியில் களம் கண்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தங்களுக்கான முதல் கோலை அடிக்க கடுமையாக முயற்சித்தன.

Advertisment

ராணி ராம்பால் வழிநடத்திய இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கம் முதலே தொடர் தடைகளை உருவாக்கியது. இதனால் தடுமாறிய அந்த அணி 60 நிமிட ஆட்டத்தில் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் இந்திய அணியின் குர்ஜித் கவுர் முதல் கோல் அடித்து கணக்கை துவங்கி வைத்தார். இதுவே ஆட்ட இறுதியில் கடைசி கோலாகவும் இருந்தது. எனவே ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1- 0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய அணியை சாய்த்து வரலாற்றுச் சாதனையை படைத்தது.

அது என்ன வரலாற்றுச் சாதனை என்றால், ஒலிம்பிக் ஹாக்கி தொடரில் இந்திய மகளிர் அணி இதுவரை ஒரு முறை கூட அரையிறுதியை நெருங்கியது கிடையாது. தவிர, 2 முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணியை காலிறுதியோடு சாய்த்து வெளியேற்றியுள்ளது இந்திய மகளிர்அணி.

எனவே, இந்திய மகளிர் அணிக்கு சமூக வலைத்தள பக்கங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதில் ட்விட்டரில் பல பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்துள்ளனர். இந்திய ஹாக்கி (ஆடவர் மற்றும் மகளிர்) அணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, "ஹாக்கியில் 1964ம் ஆண்டு இந்தியா தங்கம் வென்றது. டோக்கியோ ஒலிம்பிக்கில் மீண்டும் நமக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்புவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் "இந்தியாவின் கனவு நனவாகும்! நமது மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்துள்ளது! #டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன! என்னுடைய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை! " என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இருந்தது என்று நீங்கள் நினைத்திருந்தால், நமது மகளிர் அணி திங்கள்கிழமையை காலத்திற்கும் மறக்க முடியாத நாளாக மாற்றி விட்டார்கள்." என்று பதிவிட்டுள்ளார்.

"நேற்று ஆடவர் ஹாக்கி அணி, இன்று மகளிர் ஹாக்கி அணி" முற்றிலும் மகிழ்ச்சி நிறைந்த தருணம்" என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், "இந்த மகளிர் அணி மறக்க முடியாத சம்பவத்தை சாதித்து விட்டார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் ஷேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் "இது ஒரு ஆஹா தருணம். நமது மகளிர் அணியின் முதல் ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி; பெருமை நிரம்பியுள்ளது. சக் தே இந்தியா" என்றுள்ளார்.

இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், "நமது மகளிர் அணியினர் அவர்களால் முடிந்ததை செய்து காட்டினர்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து மழை பொழிந்துள்ள மற்ற பிரபலங்கள்…

பரபரப்பான காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 1- 0 என்ற கணக்கில் சாய்த்த இந்திய மகளிர் அணி, நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியை எதிர்கொள்கிறது.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

India Tokyo Olympics Olympics Hockey Indian Hockey
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment