Advertisment

ஒலிம்பிக் நீச்சல் போட்டி : 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் இந்திய வீரர் சஜன் பிரகாஷ் தோல்வி!

Tokyo Olympics latest Updates in Tamil: பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் களம் கண்ட இந்திய வீராங்கனை மனிகா பத்ரா, தனது 3-வது சுற்றில் ஆஸ்திரியாவின் சோபியா போல்கனோவாவிடம் 0-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

author-image
WebDesk
New Update
Tokyo Olympics Tamil News: Tokyo Olympics 2020 latest Updates Tamil News

Tokyo Olympics Tamil News: 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ஆஸ்திரேலியா உள்பட 204 நாடுகளை சேர்ந்த 11,200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். மேலும் 33 விளையாட்டுகளில் மொத்தம் 339 தங்கப்பதக்கத்துக்காக மோதுகிறார்கள்.

Advertisment

கடந்த ஆண்டே நடந்திருக்க வேண்டிய இந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா அச்சுறுத்தலால் ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு இப்போது நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி சார்பில் மொத்தம் 127 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், ஒலிம்பிக் முதல் நாள் போட்டியில் இந்திய அணி சார்பில் களம் கண்ட மீராபாய் சானு பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் (49 கிலோ எடைப் பிரிவில்) வெள்ளி பதக்கத்தை வென்று பிரகாசமான ஆரம்பத்தை கொடுத்தார்.

நேற்று 2ம் நாள் பெரிய வெற்றிகள் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. இருப்பினும், இன்று 3வது நாளில் தகுதி சுற்றுகளை இந்திய அணியினர் வெற்றியுடன் துவங்கினர். குறிப்பாக இந்தியாவின் முதல் ஒலிம்பிக் வாள் சண்டை வீராங்கனை பவானி தேவி தனது அறிமுக போட்டியை வெற்றியுடன் துவங்கினார். ஆனால் தனது 32 வது சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்தார்.

இதே போல் அதானு தாஸ், பிரவீன் ஜாதவ், மற்றும் தருந்தீப் ராய் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் வில்வித்தை அணி தகுதி சுற்றில் கஜகஸ்தான் அணியை 6-2 என்ற கணக்கில் வீழ்த்திய நிலையில் காலிறுதி ஆட்டத்தில் கொரியாவிடம் 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சரத் கமல் போர்ச்சுகல் அணியை வீழ்த்தி 2 வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆனால் பெண்கள் ஒற்றையர் பிரிவில் களம் கண்ட சுதிர்தா முகர்ஜி போர்ச்சுகல் அணியிடம் தோல்வியை தழுவினார்.

செய்லிங் பெண்கள் ஒற்றையர் ரேடியல் லேசர் பிரிவில் இந்தியா நேத்ரா குமணன் 15 புள்ளிகள் பெற்றுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உள்ள விஷ்ணு சரவணன் 20வது இடத்தில் உள்ளார்.

ஸ்கீட் ஷூட்டிங் பிரிவில் இந்திய அணி சார்பில் களமிறங்கிய மைரஜ் அகமது கான் மற்றும் அங்கத் பஜ்வா தகுதி பெறவில்லை. இருப்பினும், இன்றை நாள் முடிவிற்கு இந்திய அணி இன்னும் 3 போட்டிகளில் களமிறங்குகிறது.

பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் களம் கண்ட இந்திய வீராங்கனை மனிகா பத்ரா, தனது 3-வது சுற்றில் ஆஸ்திரியாவின் சோபியா போல்கனோவாவிடம் 0-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

ஒலிம்பிக் ஆடவர் குத்துச்சண்டை போட்டியில் சீன வீரர் எர்பிகியிடம் போராடி தோல்வியுற்றார் இந்திய வீரர் ஆஷிஷ் குமார்.



ஆடவருக்கான 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் ஹீட்ஸ் 2 சுற்றில் 4 வது இடம்பிடித்த இந்திய வீரர் சஜன் பிரகாஷ் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

மாலை 5:45 -க்கு நடக்கவுள்ள மகளிர் ஹாக்கி போட்டியில் 'ஏ' பிரிவில் இந்திய அணி ஜெர்மனி அணியை எதிர்கொள்கிறது.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

India Tokyo Olympics Olympics Japan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment